ஐ.டி. நிறுவனங்களில் 1% ஊதிய உயர்வு!

நாட்டில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் 1 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்பட்டிருப்பதாகத் தகவல்.
ஐ.டி. நிறுவனங்கள் - கோப்புப்படம்
ஐ.டி. நிறுவனங்கள் - கோப்புப்படம்Center-Center-Chennai
Published on
Updated on
2 min read

அதிக வருமானம் ஈட்டும் துறைகளில் தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) நிறுவனங்கள் முன்னணியில் இருந்த நிலையில், இந்த ஆண்டில் பல ஐ.டி. நிறுவனங்களில் 1 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்பட்டிருப்பது இளம் தலைமுறையை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

கடந்த வாரம் நாஸ்டாக்-பட்டியலிட்டிருந்த காக்னிசென்ட் நிறுவனம், நான்கு மாத தாமதத்திற்குப் பிறகு தனது ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை மேற்கொண்டது, ​​​​அது மிகக் குறைந்தபட்ச அளவான 1% என்ற அளவிலிருந்து ஊதிய உயர்வு தொடங்கியதற்காக சமூக ஊடகங்களில் நிறுவனம் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

இதற்கு, கக்னிசென் நிறுவனம் வெளியிட்ட விளக்க அறிக்கையில், இந்த ஊதிய உயர்வு எனும் சுழற்சியானது, தனிநபரின் செயல்திறன் அதிகரிப்பு மற்றும் பெரு நிறுவனங்களின் இயக்கவியல் மாற்றம் என இரண்டுடன் பிணைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தது.

ஐ.டி. நிறுவனங்கள் - கோப்புப்படம்
கார் சண்டையாக மாறிய குடும்பச் சண்டை: 5 பேர் படுகாயம்! வைரலான விடியோ

ஊதிய உயர்வு குறித்து வெளியான தகவலின்படி, அதிக செயல்திறனுடன், உயர்ந்த மதிப்பீடு கொண்ட ஊழியர்களுக்கே 4.5 சதவீத ஊதிய உயர்வு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனம், உயர் செயல்திறன் கொண்டவர்களுக்கு இரட்டை இலக்க ஊதிய உயர்வை வழங்கவிட்டு, மீதமுள்ள ஊழியர்களுக்கு சராசரியாக 4.5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை ஊதிய உயர்வை, ஏப்ரல் 1 முதல் கணக்கிட்டு நடைமுறைப்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தில், ஊழியர்களுக்கு கடைசி ஊதிய உயர்வு கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், முதல் காலாண்டு வருவாய் கூட்டத்தின் போது, நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஜெயேஷ் சங்ராஜ்கா, ​​பேசுகையில் ஊதிய உயர்வை பரிசீலனை செய்யும்போது, பல காரணிகளை (பணவீக்கம், இதர நடைமுறைகள்) கணக்கில் எடுக்க வேண்டியது அவசியம் என்று கூறியிருந்தார்.

"இந்த கட்டத்தில் நாங்கள் அதையெல்லாம் மதிப்பீடு செய்து வருகிறோம், கடந்த காலாண்டு மற்றும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு எங்கள் ஊதிய உயர்வு விகிதமானது பல வழிகளில் மேம்படுத்தப்பட்டிருக்கும்" என்றும் அவர் கூறினார்.

அதாவது, பணவீக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு ஒற்றை இலக்க ஊதிய உயர்வை அறிவித்து வருகின்றன.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஆள்களை எடுக்கும் எக்ஸ்பெனோ நிறுவனத்தின் வணிகத் தலைவர் கிருஷ்ண கௌதம் கூறுகையில், "தகவல் தொழில்நுட்பத் துறையின் செலவுகள் மற்றும் ஊதிய உயர்வுகள் அனைத்தும், அந்நிறுவனத்தின் வருவாய் செயல்திறன் மற்றும் வருவாய் வளர்ச்சிக்கான அளவீடுகளுடன் பிணைக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிறுவன இயக்கச் செலவுகள் மற்றும் ஊதிய உயர்வுகள், வருவாய் மற்றும் வருவாய் வளர்ச்சியில் மந்தமான நிலை இருப்பதை எதிரொலிப்பதாக” கூறியுள்ளார்.

எக்ஸ்பெனோ அளிக்கும் தகவலின்படி, நாட்டில் உள்ள தலைசிறந்த 7 தகவல் தொழில்நுட்ப சேவை வழங்கும் நிறுவனங்கள் ஒன்றிணைத்து, கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், 2024ஆம் ஆண்டு ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் 3.4 சதவீத ஆண்டு வருவாய் வளர்ச்சியை மட்டுமே கண்டுள்ளது. இந்த நிறுவனங்கள், தங்களது நிறுவன இயக்கச் செலவுகளை 2.8 சதவீத ஆண்டு வளர்ச்சியுடன் கட்டுப்படுத்தியிருக்கின்றன.

நிறுவன இயக்கச் செலவுளைக் கட்டுப்படுத்துவது என்பது, ஊழியர்களின் எண்ணிக்கைக் குறைப்பு, பணியாளர்களுக்கு சராசரியான ஊதிய உயர்வை வழங்குவது போன்றவற்றின் மூலம் சாத்தியமாக்குகின்றன. இதன் மூலம், ஜூன் 2023 இல் முடிவடைந்த 12 மாத காலத்தில், 14.2 சதவீத இயக்கச் செலவு வளர்ச்சியுடன் 12.4 சதவீத வருவாய் வளர்ச்சியைக் கண்டன இந்நிறுவனங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com