
மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே, அம்பேர்நாத் பகுதியைச் சேர்ந்த பிந்தேஷ்வர் ஷர்மா என்பவர், தனது சஃபாரி காரைக் கொண்டு, தந்தையின் ஃபார்ட்யூனர் காரை இடித்துச் சம்பவத்தில் ஐந்து பேர் காயமடைந்தனர். அதில் 2 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.
பிந்தேஷ்வர் தந்தை சதீஷ் சர்மா, ஓய்வுபெற்ற பாதுகாப்புப் படை வீரராவார். இவர், தனது மகனுக்கும் மருமகளுக்கும் இருக்கும் குடும்பச் சண்டையை பேசித் தீர்ப்பதற்காக செவ்வாய்க்கிழமை பிந்தேஷ்வர் வந்துள்ளார்.
இவருக்கும், மகனுக்கும் ஏற்கனவே பிரச்னை இருந்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், மூத்த மகனுக்கும் மருமகளுக்கும் பிரச்னை என்று தகவல் வந்ததால், மும்பையில் வாழ்ந்து வரும் சதீஷ், தனது மனைவி மற்றும் இளைய மகனுடன், பிந்தேஷ்வர் வீட்டுக்கு காரில் சென்றுள்ளார். ஆனால், அங்கு பிந்தேஷ்வர் இல்லை, அதனால், அவர்கள் மீண்டும் மும்பை புறப்பட்டுள்ளனர். அப்போது வழியில், பிந்தேஷ்வர் வேகமாக தனது சஃபாரியை ஓட்டி வருவதைப் பார்த்திருக்கிறார்கள். உடனடியாக தந்தையின் கார் ஓட்டுநர், காரை சாலையோரம் நிறுத்தியிருக்கிறார்.
சதீஷ் குடும்பத்தினர், பிந்தேஷ்வர் தங்களிடம் பேச வருவார் என்று நினைத்து காரிலிருந்து இறங்கியிருக்கிறார்கள். ஆனால், பிந்தேஷ்வர், காரை நிறுத்தாமல், தந்தையின் காரிலிருந்து இறங்கிய ஓட்டுநர் மீது காரை மோதிவிட்டு, 100 அடி தூரம் அவரை இழுத்துச் சென்றுள்ளார், அப்போதும் நிற்காமல், வண்டிய யு டர்ன் எடுத்து மீண்டும் வேகமாக வந்து தந்தையின் எஸ்யுவி வாகனம் மீது மோதி சில அடிகள் வரை காரை பின்னோக்கி தள்ளுகிறார்.
இதில், வாகனத்தின் பின்னால் சிக்கிய 5 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் தந்தையின் கார் ஓட்டுநர் மற்றும் பைக்கை ஓட்டி வந்தவர் என இரண்டு பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான விடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.
காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய பிந்தேஷ்வரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.