பிரதமர் மோடியை விஞ்சிய ஷ்ரத்தா கபூர்!

அதிக ஃபாலோயர்ஸ் கொண்ட இந்திய பிரபலங்களின் பட்டியலில் ஷ்ரத்தா கபூருக்கு 3வது இடம்.
Narendra modi Shraddha Kapoor
நரேந்திர மோடி / ஷ்ரத்தா கபூர்இன்ஸ்டாகிராம்
Published on
Updated on
1 min read

இன்ஸ்டாகிராமில் அதிக நபர்களால் பின்தொடரப்படும் (ஃபாலோயஸ்) பிரபலங்களின் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடியை பின்னுக்குத்தள்ளினார் நடிகை ஷ்ரத்தா கபூர்.

இதன்மூலம், இந்தியாவில் அதிக நபர்களால் இன்ஸ்டாகிராம் செயலியில் பின்தொடரப்படும் இந்திய பிரபலங்களின் பட்டியலில் ஷ்ரத்தா 3வது இடத்தைப் பிடித்துள்ளார்.

மெட்டா நிறுவனத்துக்குச் சொந்தமான இன்ஸ்டாகிராம் செயலி இந்திய பயனர்களிடம் மிகவும் பிரமலமானது. இதில் பிரபலங்களை பயனர்கள் பலர் பின்தொடர்கின்றனர்.

புதன்கிழமை நிலவரப்படி நடிகை ஷ்ரத்தா கபூரை 91.4 மில்லியன் நபர்கள் பின்தொடர்கின்றனர். இதனால், 91.3 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடியை ஷ்ரத்தா முந்தினார்.

இதன்மூலம் இன்ஸ்டாகிராமில் அதிகம் பின்தொடர்பவர்களைக் கொண்ட இந்திய பிரபலங்களின் பட்டியலில் விராட் கோலி, பிரியங்கா சோப்ராவுக்கு அடுத்ததாக, 3வது இடத்தில் ஷ்ரத்தா கபூர் உள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு 271 மில்லியன் நபர்களும், பிரியங்கா சோப்ராவுக்கு 91.8 மில்லியன் நபர்களும் பின்தொடர்பவர்களாக உள்ளனர்.

இயக்குநர் அமர் கெளசிக் இயக்கத்தில் வெளியான (ஆக. 15) ஸ்ட்ரீ -2 படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தில் உள்ள ஷ்ரத்தாவுக்கு, இச்செய்தி மேலும் மகிழ்ச்சியை சேர்க்கும் வகையில் உள்ளது. இப்படம் வெளியாகி இன்றோடு 6 நாள்களாகியுள்ளன. இதுவரை ஷ்ரத்தா கபூர் நடித்த இப்படம் ரூ. 254.55 கோடி வசூலித்துள்ளதாக பாலிவுட் திரைத்துறை வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

ஸ்ட்ரீ -2 படத்தில் ஷ்ரத்தாவுடன் நடிகர் ராஜ்குமார் ராவ், பங்கஜ் திரிபாதி, அபிஷேக் பானர்ஜி, அபர்சக்தி குர்ஹானா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Narendra modi Shraddha Kapoor
கன்னட படத்தில் நாயகியாகும் தமிழ் சீரியல் நடிகை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com