இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!நிஃப்டி 23,450-க்கு கீழ் சரிவு: 3 மாதக் குறைந்தபட்சத்தில் பங்குச் சந்தை; சென்செக்ஸ் 813 புள்ளிகள் வீழ்ச்சி!!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!லாரியிலிருந்து விழுந்த இரும்புராடு! பைக்கில் சென்ற மாடுபிடி வீரர்கள் பலி!!தீபாவளிக்கு ஊருக்குப் போவோர் திரும்பி வர! நாளை முதல் ரயில் டிக்கெட் முன்பதிவுபட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடுநார்வே மன்னர் ஹரால்டின் இறுதிச் சடங்கு! ஏராளமான உலகத் தலைவர்கள் பங்கேற்பு!சேலம் - திண்டுக்கல்; ஒசூர் - ஓமலூர் இருவழி ரயில் தடத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!பாரத ரத்னா பெற்ற 92 வயது விஞ்ஞானிக்கு எஸ்.ஐ.ஆர். நோட்டீஸ்! வினோதமான கேள்வி! முதல்வர் விஜய்யின் உடல்மொழி மனித மாண்புகளுக்கு எதிரானது! திருமாவளவன் கண்டனம்செங்குன்றம் புதிய பேருந்து நிலையம் திறப்பு எப்போது? பயணிகள் வேதனை!திடீர் திருப்பம்! தவெக நிர்வாகி கொலைக்குப் பின்னணியில் ரீல்ஸ் காரணமா?மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கன்னட படத்தில் நாயகியாகும் தமிழ் சீரியல் நடிகை!

காற்றுக்கென்ன வேலி தொடரின் நாயகி பிரியங்கா குமார் கன்னட படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார்.

Published On :

விஜய் தொலைக்காட்சியில் காற்றுக்கென்ன வேலி தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடித்த நடிகை பிரியங்கா குமார் கன்னட திரைப்படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

இவர் ஏற்கெனவே அதுரி லவ்வர், ருத்ர கருட புராணம் ஆகிய தெலுங்கு படங்களில் நாயகியாக நடித்துள்ளார். இந்த படங்களுக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தற்போது 3வது படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். எனினும் இம்முறை கன்னடத்தில் அறிமுகமாகிறார்.

காற்றுக்கென்ன வேலி தொடரில் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த பிரியங்காவின் புதிய பட வாய்ப்புகளை அவரின் ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காற்றுக்கென்ன வேலி தொடரில் நாயகியாக நடித்தவர் பிரியங்கா குமார். நடிகர் சுவாமிநாதன் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

பிரியங்கா குமார்

பிரியங்கா குமார் - இன்ஸ்டாகிராம்

இத்தொடரில் பிரியங்கா குமார் - சுவாமிநாதன் இடையேயான காதல் காட்சிகள் பலரால் பாராட்டப்பட்டவை. சமூக வலைதளங்களில் காற்றுக்கென்ன வேலி தொடரின் காதல் காட்சிகளை இளம் தலைமுறை ரசிகர்கள் பலர் பகிர்வது வழக்கம்.

இதனால் சமூக வலைதளத்திலும் பிரியங்கா குமாருக்கு பலதரப்பட்ட ரசிகர்கள் உருவாகினர். சமூக வலைதளத்தில் சுறுசுறுப்பாக இயங்கும் பிரியங்கா, அவ்வபோது தான் வெளியிடும் படங்களின் மூலம் ரசிகர்களிடம் தொடர்ந்து உரையாடி வந்தார்.

பிரியங்கா குமார் ஒப்பந்தமாகியுள்ள கன்னட படத்தின் போஸ்டர்

பிரியங்கா குமார் ஒப்பந்தமாகியுள்ள கன்னட படத்தின் போஸ்டர் - இன்ஸ்டாகிராம்

தற்போது புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளதை தனது ரசிகர்களுக்கு அறிவித்துள்ளார். புதிதாக நடிக்கும் தூர தீர யான என்ற கன்னட படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இதில் பிரியங்காவுக்கு ஜோடியாக தெலுங்கு நடிகர் விஜய் கிருஷ்ணா நடிக்கவுள்ளார். இப்படத்தை கன்னட திரைப்பட இயக்குநர் மன்சோ ரே இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக பிரியங்கா தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.