இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!சூப்பர் ஸ்டார் டைட்டில் கார்டு! இன்றுவரை ரசிகர்களை ஆட்டுவிக்கும் தேவாவின் பிஜிஎம்இசையமைப்பாளர் தேவா காலமானார்!டாஸ்மாக் கடைகளில் விரைவில் 4 புதிய பீர் வகைகள்! விலை விவரம்!வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கினால்... அடுக்கடுக்கான குளறுபடிகள்! மக்கள் கேள்விஇன்று கோவை, திருவள்ளூா் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை ராமேசுவரம் - எழும்பூருக்கு இன்று சிறப்பு விரைவு ரயில் தாம்பரம் - விழுப்புரம் மெமு ரயில் நாளை பகுதி ரத்து லாஸ் ஏஞ்சலீஸ் மேயா் தோ்தல்: கேரள வம்சாவளி பெண் முன்னிலை பிரதமா் மோடி டிசம்பரில் கனடா பயணம்

மண்ணை விட்டு மறைந்தாலும் தென்றலாய் பரவும் அவரது தேனிசை..!

தேவா தனது வாழ்நாள் முழுவதும் மக்கள் கலைஞராக இருந்திருந்தது குறித்து...

Death of Music Director Thiru Deva

தேனிசை தென்றல் தேவா - டிஎன்எஸ்

Updated On :

இறைவனின் நிழலில் இளைப்பாறிய தகவல் பரவிய சில மணித்துளிகளில் சமூக வலைதள முகப்புகள் முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்டார் தேனிசை தென்றல் தேவா. தனது படைப்புகளுக்காக மட்டுமே கொண்டாடப்படும் எந்தவொரு கலைஞனாலும், சமூக வலைதளங்களில் இப்படியொரு உடனடி தாக்கத்தை ஏற்படுத்திவிட முடியாது. தேவாவுக்காக காட்டப்படும் இந்த பேரன்புக்கு காரணம், அவர் தனது வாழ்நாள் முழுவதும் மக்கள் கலைஞராக இருந்திருப்பதையே பிரதிபலிக்கிறது.

சென்னையின் விளிம்புநிலை சமூகத்தின் கலாசார தொன்மைக்குச் சான்றாய் திகழ்வது கானா பாடல்கள். அதை திரையிசை வடிவில் கொண்டுவந்து, உலகெங்கும் அத்தகைய பாடல்களைக் கொண்டு சேர்த்த பெருமை தேனிசை தென்றலையே சேரும். உழைக்கும் மக்களின் வாழ்வில் இரண்டென கலந்திருந்த கானா பாடலுக்கு, வடசென்னை தாண்டி அங்கீகாரமும், வரவேற்பும் இல்லாமல் இருந்து வந்தது.

அந்த நேரத்தில், தேவதூதனாய் தமிழ் திரையிசை உலகில் கால் பதித்தவர்தான் தேவா.

2011 இல் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவராக நியமிக்கப்பட்டதற்கு அன்றைய முதல்வர் ஜெ.ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் சந்தித்து நன்றி தெரிவித்த தேவா.

2011 இல் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவராக நியமிக்கப்பட்டதற்கு அன்றைய முதல்வர் ஜெ.ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் சந்தித்து நன்றி தெரிவித்த தேவா.

தனது ஆரம்ப நாள்களில் சந்தித்த எத்தனையோ இன்னல்களைக் கடந்து, 1986-ஆம் ஆண்டில் 'மாட்டுக்கார மன்னாரு', படத்தில் அறிமுகமாகி இருந்தாலும், 1989-ல் ராமராஜன் நடிப்பில் வெளிவந்த 'மனசுகேத்த மகராசா' படத்தில் வந்த பாடல்கள்தான் தேவாவுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுத்தது. ஆனால், அதே ஆண்டில் வெளியான 'வைகாசி பொறந்தாச்சு' படத்தில் வந்த பாடல்கள்தான் ஒட்டுமொத்த தமிழகமும் தேவாவின் பக்கம் திரும்ப பார்க்க வைத்தது.

இந்த படத்தில் வரும் 9 பாடல்களில் 2-3 கானா ஸ்டைல் பாடல்களையும் தேவை வைத்திருப்பார். 'நீலக்குயிலே', 'சின்னப்பொன்னுதான்', 'கண்ணே கரிசல் மண்ணு', 'தண்ணி குடம் எடுத்து', 'ஆத்தா உன் கோயிலிலே' என அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தன. ஆனாலும், தேவா தமிழ் திரை உலகில் நிலைத்திருக்க அந்த வெற்றி போதுமானதாக இல்லை.

இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு, ஒருசில பட வாய்ப்புகள் கிடைத்தாலும், தேவா தன்னை இங்கு நிலைநிறுத்திக் கொள்வதற்கு ஒரு சூப்பர் டூப்பர் வெற்றி தேவைப்பட்டது.

இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதனுடன் தேவா

இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதனுடன் தேவா

அதிலிருந்து கிட்டத்தட்ட 3 ஆண்டுகள், 1992-இல் கே.பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனம் 'ரோஜா', 'வானமே எல்லை', 'அண்ணாமலை' ஆகிய மூன்று புதிய திரைப்படங்களுக்கான அறிவிப்பை வெளியிடுகிறது. இளையராஜாவின் பெயர் இல்லாமல் அறிவிக்கப்பட்ட இந்த மூன்று படங்களில் ஒன்றான அண்ணாமலைக்கு தேவா இசையமைப்பாளராக அறிவிக்கப்படுகிறார். கோடம்பாக்கம் சினிமா வட்டாரங்களில் அண்ணாமலை படத்தின் அறிவிப்பும் இசையமைப்பாளர் தேவாவும் பேசுபொருளாகிறது.

அந்தப் படத்தில் பாடல்கள் அனைத்தையும் மெகா ஹிட்டாக்கிய தேவா, பின்னணி இசையில் வெளுத்து வாங்குகிறார். அத்துடன், நடிகர் ரஜினிகாந்தின் பெயர் வரும் இடத்துக்காக, ஜேம்ஸ் பாண்ட் பெயர் வரும்போது இசைபோல, ரஜினிக்கு எக்ஸ்ட்ரா எஃபெக்ட்ஸ் வைத்து, ஒரு சிறப்பிசையையும் தேவா அறிமுகப்படுத்துகிறார். அவ்வளவுதான், 'அண்ணாமலை' திரைப்படம், தேனிசை தென்றல் இத்தனை நாள்களாக காத்திருந்த மாபெரும் வெற்றியை அவருக்கு பெற்றுத் தருகிறது. அங்கிருந்துதான் தொடங்குகிறது தேவாவின் இசை சாம்ராஜ்யம்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஜி.கே.மூப்பானருடன் தேவா

காங்கிரஸ் மூத்த தலைவர் ஜி.கே.மூப்பானருடன் தேவா

முதல்வர் விஜய், அஜீத், பிரசாந்த் என 90-களின் பிற்பகுதியில் தமிழ் திரையுலகில் கால் பதித்த அன்றைய இளம் நாயகர்கள் அனைவரது ஆரம்ப கால படங்கள் அனைத்துக்கும் தேவாதான் இசை. 90-களில் வாழ்ந்தவர்களின் திரைப்பட அனுபவங்களில் தேவாவின் இசையும், பாடல்களும் பொதிந்து கிடக்கும். காதல், சோகம், கானா, குத்துப்பாட்டு என தேவா எதை தொட்டாலும் ஹிட்டுதான். இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், எஸ்.ஏ.ராஜ்குமார், வித்யாசாகர், சிற்பி என மிகச் சிறந்த இசையமைப்பாளர்கள் உடன் போட்டியிட்டு வெற்றி கண்ட இசையமைப்பாளர் தேவா.

மு.க.ஸ்டாலின், கேப்டன் விஜயகாந்துடன் தேவா

மு.க.ஸ்டாலின், கேப்டன் விஜயகாந்துடன் தேவா

இதையெல்லாம் கடந்து, தேவாவை இளம் தலைமுறையினர் இப்படி கொண்டாடுவதற்கு காரணம் அவரது உற்சகம் தரும் பாடல்கள்தான். திரையிசை கலந்த கானா பாடல்கள் தந்த போதையில், பலரும் கிறங்கிக் கிடந்தனர். 'சலோமியா', 'மீனாட்சி மீனாட்சி', 'உதயம் தியேட்டருல', 'அண்ணாநகர் ஆண்டாளு', 'குலுக்கி வச்ச கொக்க கோலா', 'கவலைப்படாதே சகோதரா', 'சிரிப்பு வருது சிரிப்பு வருது', 'விதவிதமா சோப்பு சீப்பு', 'வாங்குடா 420 பீடா', 'தொட்டபெட்டா ரோட்டு மேல', 'குன்றத்துல கோயில கட்டி' என இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே போகும். இப்போதும்கூட, ட்ரிப் பிளான் பண்ணும் அனைவரது பக்கெட் பட்டியலிலும் தேவாவின் பாடல்கள் இடம்பெற்றிருக்கும்.

ரஜினிகாந்துடன் தேவா

ரஜினிகாந்துடன் தேவா

தமிழ் திரையுலகில் கர்நாடக சங்கீதம், ஹிந்துஸ்தானி, கஜல், ஸூபி, மேற்கத்திய இசை, மேற்கத்திய செவ்வியல் இசை, நாட்டுப்புற இசை என்ற இசை வடிவங்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டு வந்த முக்கியத்துவத்தை, உழைக்கும் மக்களின் கானா இசைக்கும் பங்குபோட்ட பெருமைக்குரியவர் தேவா. மண்ணை விட்டு அவர் மறைந்தாலும், தென்றலாய் அவரது தேனிசை நம் உள்ளங்களில் என்றும் பரவும்.

Death of Music Director Thiru Deva: his honeyed melodies continue to spread like a gentle breeze..!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.