மகராஷ்டிரத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருகின்றன: சரத் பவார்

இந்த சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஒரு நாள் அடைப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 சரத் பவார்
சரத் பவார்
Published on
Updated on
1 min read

மகாராஷ்டிரத்தில் இளம்பெண்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்தார்.

தாணே மாவட்டத்தின் பத்லாபூர் நகரில் உள்ள மழலையர் பள்ளியில் சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமைக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.

 சரத் பவார்
திரிபுரா வெள்ள நிவாரணமாக ரூ.40 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல்!

இதுதொடர்பாக செய்தியாளர்களுடனான சந்திப்பில் சரத் பவார் கூறியது,

பத்லாபூர் போன்ற சம்பவங்களைத் தடுக்க மாநில அரசு விழிப்புடன் செயல்பட வேண்டும். தேவைப்படும் இடங்களில் உள்துறை அமைச்சகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநிலம் முழுவதும் இதுபோன்ற பல குற்றங்கள் பதிவாகியுள்ளன. சிறுமிகள், பெண்கள் இடையே இதுபோன்ற பல கொடுமைகள் தொடர்ந்து வருகின்றது.

 சரத் பவார்
வார பலன்கள்: 12 ராசிக்கும்!

மாநிலத்தில் நாளுக்கு நாள் வன்கொடுமை எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மக்கள் தங்கள் வேதனையை வெளிப்படுத்த எதிர்வினையாற்றுகிறார்கள்.

இந்த சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஒரு நாள் அடைப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முழு அடைப்புப் போராட்டத்தில் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் பங்கேற்க வேண்டும் என்று பவார் வலியுறுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com