திரிபுராவில் வெள்ளம்
திரிபுராவில் வெள்ளம்Center-Center-Delhi

திரிபுரா வெள்ள நிவாரணமாக ரூ.40 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல்!

மத்திய பங்காக ரூ.40 கோடியை விடுவிக்க மோடி தலைமையிலான மத்திய அரசு ஒப்புதல்..
Published on

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திரிபுராவுக்கு ரூ.40 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

வெள்ள நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் மாநில அரசுக்கு உதவுவதற்காக தேசிய பேரிடர் மீட்புப் படையின் 11 குழுக்கள் ராணுவம், இந்திய விமானப் படையின் நான்று ஹெலிகாப்டர்கள் ஆகியவை மத்திய அரசால் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

திரிபுராவில் வெள்ளம்
வரம் தரும் வாரம்!

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

திரிபுராவில் ஏற்பட்டுள்ள வெள்ளச் சூழலைக் கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க எஸ்டிஆர்எப்(மாநில பேரிடர் மீட்பு நிதி)யிலிருந்து மத்திய பங்காக ரூ.40 கோடியை விடுவிக்க மோடி தலைமையிலான மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

திரிபுராவில் உள்ள சகோதரிகள், சகோதரர்கள் இந்த கடினமான காலங்களில் மோடி அரசு அவர்களுடன் துணை நிற்பதை காண்பீர்கள் என்று கூறினார்.

திரிபுராவில் வெள்ளம்
பேயாகத் துரத்தும் ஆணாதிக்கம்... கொட்டுக்காளி - திரை விமர்சனம்!

திரிபுராவில் கடந்த சில நாள்களாகப் பெய்த தொடர் மழை, வெள்ளம், நிலச்சரிவுக்கு 22 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கனமழையால் வீடுகள் சேதமடைந்தால் மாநிலத்தில் உள்ள 450 நிவாரண முகாம்களில் 65,400 பேர் தஞ்சமடைந்துள்ளனர். திரிபுராவில் மழை மற்றும் வெள்ளத்தால் இதுவரை 17 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com