புணேவில் தனியார் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
மும்பையில் இருந்து ஹைதராபாத் சென்ற தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான ஹெலிகாப்டரில் விமானி உள்பட 4 பேர் பயணித்துள்ளனர்.
அப்போது புணேவில் பாட் கிராமத்தின் அருகே வந்தபோது கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில் விமானி உள்பட அனைவருமே உயிர் தப்பினர். விமானிக்கு காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மற்ற மூவருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என புணே காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வானிலை மாற்றம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.