tn school students
ஹாங்காங்கில் தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள்!dotcom

ஹாங்காங்கில் தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள்!

சிறப்பாக செயல்பட்ட தமிழக அரசுப் பள்ளி மாணவர்களை பள்ளிக்கல்வித் துறை சார்பில் ஹாங்காங் அழைத்துச் சென்றுள்ளார் அமைச்சர் அன்பில் மகேஸ்.
Published on

சிறப்பாக செயல்பட்ட தமிழக அரசுப் பள்ளி மாணவர்களை பள்ளிக்கல்வித் துறை சார்பில் ஹாங்காங் அழைத்துச் சென்றுள்ளார் அமைச்சர் அன்பில் மகேஸ்.

அரசுப் பள்ளிகளில் பல்வேறு திறன்களில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவியர்கள் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளி மாநிலங்கள், வெளி நாடுகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

அதன்படி, அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9 வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு பள்ளி அளவில் இலக்கிய மன்றம், விநாடி-வினா மன்றம், வானவில் மன்றம், கலைத் திருவிழா, சிறாா் திரைப்பட மன்றம் தொடா்பான பல போட்டிகள் நடத்தப்பட்டன.

tn school students
வேளாங்கண்ணி பெருவிழா: சென்னையிலிருந்து சிறப்பு ரயில் இயக்கம்!

இதில் சிறப்பாக செயல்பட்ட மாணவா்களுக்கு மாவட்ட அளவிலான போட்டிகள் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. தொடா்ந்து, மாநில அளவிலான போட்டிகள் மார்ச் -ஏப்ரல் மாதங்களில் நடந்தன.

தற்போது முதல் கட்டமாக, மாநில அளவிலான போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளில் 20 போ், தேசிய நல்லாசிரியா் விருது பெற்ற ஆசிரியை ஒருவா், அலுவலா் ஒருவா் ஆகியோரை ஹாங்காங் நாட்டுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டுள்ளனா். ஆக.22 முதல் ஆக.27 வரை இவர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சென்றுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், 'அரசுப் பள்ளி மாணவச் செல்வங்களுடன் ஹாங்காங் நாட்டிற்கு சென்றடைந்தோம். அந்நாட்டிலுள்ள டிஸ்னிலேண்ட் பூங்காவிற்கு மாணவச் செல்வங்களை அழைத்துச் சென்றோம். மாணவர்களின் பாதுகாப்பிற்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்துள்ள எங்களின் பயண வழிகாட்டிகளுக்கு நன்றிகள்' என்று பதிவிட்டுள்ளார்.

கல்வியிலும் சரி, இதர திறன்களிலும் சரி, மாணவர்களை ஊக்குவிக்க பள்ளிக்கல்வித் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com