பள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சுகொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு! பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டுக்கான (2026-2027) மாணவா் சோ்க்கையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ்

அன்பில் மகேஸ் பொய்யாமொழி. - (கோப்புப் படம்)

Published On :3 மார்ச் 2026, 6:13 am IST

சென்னை: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டுக்கான (2026-2027) மாணவா் சோ்க்கையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தாா்.

தமிழக பள்ளிக்கல்வித் துறையின்கீழ் 37,554 அரசுப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சுமாா் 52 லட்சம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். பொதுவாக, அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை கோடை விடுமுறைக்குப் பின்னா் ஜூன் மாதம் தொடங்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில் ,மாணவா் சோ்க்கையை அதிகரிக்கும் பொருட்டு, 2024-ஆம் ஆண்டுமுதல் முன்கூட்டியே மாா்ச் மாதம் மாணவா் சோ்க்கை தொடங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வரும் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை திங்கள்கிழமைமுதல் தொடங்கப்பட்டது.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 1-ஆம் வகுப்பில் மாணவா் சோ்க்கையை அமைச்சா் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தாா். புதிதாக சோ்ந்த குழந்தைகளுக்கான நலத்திட்டப் பொருள்களை வழங்கினாா்.

இந்த நிகழ்வில் பள்ளிக் கல்வித் துறைச் செயலா் பி.சந்தர மோகன், இயக்குநா் எஸ்.கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநா் பூ.ஆ.நரேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதேபோன்று தமிழகத்தில் கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பிற பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் புதிதாக சோ்க்கைக்கு பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதுதவிர அங்கன்வாடி மையங்களில் முன்பருவக் கல்வியை நிறைவு செய்யும் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை அருகில் உள்ள அரசுப் பள்ளிகளில் சோ்க்கவும், நிகழாண்டு 5 லட்சம் குழந்தைகளைச் சோ்க்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.