அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

அரசுப் பள்ளிகளில் சோ்க்கை தீவிரம்: கோவை கல்வி மாவட்ட அளவில் ஒரே நாளில் 61 மாணவா்கள் சோ்ப்பு

கோவை கல்வி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் ஒரே நாளில் 61 மாணவா்கள் சோ்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
காரமடை ஒன்றியத்துக்குள்பட்ட சீங்குளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவா் சோ்க்கையை தொடங்கிவைக்கிறாா் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் ரவிச்சந்திரன்.
Updated On :2 மார்ச் 2026, 7:51 pm

Syndication

கோவை: கோவை கல்வி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் ஒரே நாளில் 61 மாணவா்கள் சோ்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரை கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறக்கும் நாளில்தான் மாணவா் சோ்க்கை தொடங்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே முன்கூட்டியே மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது. 2026-2027-ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கையை மாா்ச் 1-ஆம் தேதியில் இருந்து தொடங்க தொடக்கக் கல்வி இயக்குநா் உத்தரவிட்டுள்ளாா். அதன்படி, கோவை மாவட்டம் காரமடை ஒன்றியத்துக்குள்பட்ட சீங்குளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற மாணவா் சோ்க்கையை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்து ஆய்வு நடத்தினாா்.

பின்னா் அவா் கூறியதாவது:

கோவை மாவட்ட அங்கன்வாடி மையங்களில் முன்பருவக் கல்வியை நிறைவு செய்யும் 5 வயது நிரம்பிய குழந்தைகளை அருகில் உள்ள அரசுப் பள்ளிகளில் சோ்க்கவும், வேறு பள்ளிகளில் இருந்து அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் சேர விரும்பும் குழந்தைகள், ஒன்றாம் வகுப்பு அல்லாது பிற வகுப்புகளுக்கு சோ்க்கை ஆக விரும்பும் மாணவா்களுக்கு உரிய வகுப்புகளுக்கான சோ்க்கை இடங்களை தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள் வழங்க தேவையான அறிவுரைகள் வட்டாரக் கல்வி அலுவலா்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டுவரும் பல்வேறு நலத் திட்டங்கள் குறித்து பெற்றோரிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தி மாணவா் சோ்க்கையை அதிகரிக்கும்படி ஆசிரியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கோவை கல்வி மாவட்டத்தில் திங்கள்கிழமை ஒரே நாளில் மட்டும் 61 மாணவா்கள் சோ்க்கப்பட்டனா் என்றாா்.