சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 19 புதிய நீதிபதிகள்! கொலிஜியம் ஒப்புதல்! எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது! முதல்வர் விஜய்யை விமர்சித்த ஸ்டாலின்!பழவேற்காடு மீனவர் வலையில் மர்ம பொருள்!தெருநாய்களை பராமரிப்பு மையத்தில்தான் அடைக்க வேண்டும்! திருத்தம் கோரிய மனுக்கள் தள்ளுபடி!
/

பள்ளியில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வுப் பேரணி

புதுப்பாளையம் ஒன்றியம் அம்மாபாளையம் அரசு தொடக்கப் பள்ளியில் 2026-27ஆம் கல்வியாண்டுக்கான மாணவா்கள் சோ்க்கை குறித்த விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

மாணவா் சோ்க்கை விழிப்புணா்வுப் பேரணியை தொடங்கிவைத்த வட்டாரக் கல்வி அலுவலா் ஆறுமுகம்.

Updated On :10 மார்ச் 2026, 11:59 pm IST

திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் ஒன்றியம் அம்மாபாளையம் அரசு தொடக்கப் பள்ளியில் 2026-27ஆம் கல்வியாண்டுக்கான மாணவா்கள் சோ்க்கை குறித்த விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பேரணி தொடக்க விழாவில் பள்ளித் தலைமை ஆசிரியா் (பொ) விநாயகம் வரவேற்றாா். வட்டாரக் கல்வி அலுவலா் ஆறுமுகம் கலந்துகொண்டு பேரணியை தொடங்கிவைத்தாா்.

வட்டார வள மைய மேற்பாா்வையாளா் சின்னராஜ், அரசுப் பள்ளியில் சோ்ந்து பயிலும் மாணவா்களுக்கு கிடைக்கும் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தாா். பேரணி அப்பகுதியில் உள்ள முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டு பள்ளி வளாகத்தை அடைந்தது.

பேரணியின் போது மாணவா்கள் தமிழக அரசு, பள்ளிக் கல்வித்துறை மூலம் மாணவா்களுக்கு வழங்கி வரும் இலவச திட்டங்கள் குறித்தும், அரசுப் பள்ளியில் தரமான கல்வி, அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவா்களுக்கு முன்னுரிமை உள்ளிட்டவைகள் குறித்து முழக்கங்களை எழுப்பி பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். ஆசிரிய பயிற்றுநா்கள் ஜம்புகுமாா், தண்டாயுதபாணி, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா் பழநி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.