
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதிக்கு எதிராகக் கருத்து தெரிவித்த பாஜக எம்எல்ஏ ராஜேஸ் சௌத்ரி மீது அவதூறு வழக்குத் தொடர வேண்டும் என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
மாயாவதி நான்கு முறை உ.பி.யில் முதல்வராக இருந்துள்ளார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, ஆனால் பாஜக தான் அவரை முதல் முறையாக முதல்வராக்கியது என்று மதுரா மாவட்டத்தின் மந்த் பகுதியைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ சௌத்ரி தெரிவித்தார்.
பாஜக அந்த தவற்றைச் செய்துவிட்டது. உத்தரப் பிரதேசத்தில் மாயாவதி தான் ஊழல் மிகுந்த முதல்வர் என்றும் அந்த விடியோ பதிவில் சௌத்ரி தெரிவித்துள்ளார்.
இந்தக் கருத்துக்களை யாதவ் கண்டித்துள்ளார். அரசியல் வேறுபாடுகள் அவற்றின் இடத்தைப் பெற்றுள்ளன. ஆனால் பெண்ணாக அவரது கண்ணியத்தைக் களங்கப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை.
அவரை முதல்வராக்கியது தவறு என்றும், இது ஜனநாயக நாட்டில் பொதுமக்களின் கருத்தை அவமதிக்கும் செயல் என்றும் பாஜகவினர் கூறி வருகின்றனர். அவர் மிகவும் ஊழல் செய்த முதல்வர் என்று ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பது மிகவும் ஆட்சேபனைக்குரியது.
இந்த பகிரங்க அறிக்கைக்காக பாஜக எம்எல்ஏ மீது அவதூறு வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அத்தகையவர்கள் மீது பாஜக உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இது ஒரு சட்டமன்ற உறுப்பினரின் தனிப்பட்ட கருத்து மட்டுமல்ல, ஒட்டுமொத்தக் கட்சியினரின் பார்வை என்றும் கருதப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.