
உத்தர பிரதேசத்தில் ரயில் தண்டவாளத்தில் குடையுடன் படுத்து உறங்கிய நபரால் பரபரப்பு நிலவியது.
உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் பகுதியில் திடீரென ரயிலை நடுவழியில் நிறுத்திய ஓட்டுநர் கீழே இறங்கி ரயில் தண்டவாளத்தின் முன்னே நடந்து சென்றார்.
பின்னர் தான் தெரிந்தது அந்த ரயில் தண்டவாளத்தில் குடையுடன் நபர் ஒருவர் படுத்து உறங்கிக்கொண்டிருந்தது.
ரயிலை நிறுத்திவிட்டு கீழே இறங்கிச் சென்ற ஓட்டுநர் தண்டவாளத்தில் உறங்கிக்கொண்டிருந்தவரை எழுப்பினார்.
பின்னர் அந்த ரயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.
ரயில் தூரத்தில் வரும்போதே தண்டவாளத்தில் ஏதோ இருப்பதைக் கண்ட ஓட்டுநர், ரயிலை நிறுத்தி ஒருவரின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.
தற்போது இந்த விடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.