ஆரிஃப் முகமது கான்
ஆரிஃப் முகமது கான்படம்: எக்ஸ்

கேரள திரைத் துறை பாலியல் விவகாரம்: இதுவரை எந்தப் புகாரும் வரவில்லை!

பாலியல் விவகாரம் தொடர்பாக இதுவரை யார் மீதும் புகார் வரவில்லை என்றார் ஆளுநர் ஆரிஃப் முகமது கான்.
Published on

கேரள திரைப்படத் துறையில் பாலியல் சம்பவங்கள் நடப்பதாக ஹேமா அறிக்கை தெரிவித்த நிலையில், இதுவரை யார் மீதும் புகார் வரவில்லை என மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் இன்று (ஆக. 26) தெரிவித்தார்.

திரைத் துறையைச் சேர்ந்தவர்கள் புகார் அளிக்க முன்வந்தார்ல், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் பினராயி விஜயன் ஏற்கெனவே அறிவித்துள்ளார். அதன்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆளுநர் குறிப்பிட்டார்.

கேரளத்தில் பெண் தொழிலாளர்கள் மற்றும் நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாவதாக ஹேமா அறிக்கை தெரிவித்தது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு நடிகா் திலீப் உள்ளிட்ட பலா் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டனா். இதைத் தொடர்ந்து கேரள திரைப்படத் துறையில் பாலியல் துன்புறுத்தல் குறித்த பிரச்சினைகளை ஆய்வு செய்வதற்காக, நீதிபதி ஹேமா தலைமையிலான 3 பேர் கொண்ட ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது.

கேரள திரைப்படத் துறையில் பணிபுரியும் பெண்களின் நிலைமைகள் குறித்து 51 பேரிடம் வாக்குமூலம் பெற்று, ஆய்வு மேற்கொண்ட ஹேமா கமிட்டி, மாநில அரசிடம் சமீபத்தில் அறிக்கையை சமர்ப்பித்தது.

இதில், கேரள திரைப்படத் துறையானது ஒருசில நடிகர்கள், தயாரிப்பாளர்கள் கட்டுப்பாட்டில் இயங்குவதாகவும், புதிதாக வரும் நடிகைகள் வாய்ப்புக்காக எதற்கும் சரணடைவார்கள் என்ற எண்ணம் துறையில் நிலவுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கேரள திரைத் துறை பாலியல் விவகாரம் தொடர்பாக தனிப்பட்ட நபர்கள் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும் என கேரள அரசு கேட்டுக்கொண்டது.

ஆரிஃப் முகமது கான்
சொல்லப் போனால்... நள்ளிரவில் நடுவீதியில் நகைகள் அணிந்து நடக்கும் பெண்!

இந்த விவகாரத்தில் தொடர்புடையதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், மலையாள நடிகர்கள் சங்கத்தின் (அம்மா) பொதுச்செயலர் பொறுப்பிலிருந்து நடிகர் சித்திக் ராஜிநாமா செய்தார். இதேபோல, கேரள கலாசித்ரா அகாதெமியின் தலைவர் பொறுப்பிலிருந்து இயக்குநர் ரஞ்சித்தும் விலகினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com