குஜராத்தில் பலத்த மழை: 7 பேர் பலி, 300 பேர் மீட்பு!
குஜராத்தில் பெய்த பலத்த மழைக்கு 7 பேர் பலியாகினர்.


குஜராத்தில் பெய்த கனமழைக்கு 7 பேர் பரிதாபமாக பலியாகினர். மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து 15,000-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர். 300-க்கும் மேற்பட்டோர் வெவ்வேறு இடங்களில் இருந்து மீட்கப்பட்டனர்.
முன்பு இருந்ததைவிட செவ்வாய்கிழமை மழையின் தீவிரம் குறைந்தாலும், முக்கியமாக சௌராஷ்டிராவில் அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. துவாரகா, ஆனந்த், வதோதரா, கெடா, மோர்பி மற்றும் ராஜ்கோட் மாவட்டங்களில் 14 தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் பேரிடர் மேலாண்மை அதிகாரிகளுக்கு ஆதரவாக ராணுவத்தினர் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டன.
மழை தொடர்பான சம்பவங்களில் திங்கள்கிழமை மட்டும் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
காந்திநகர், கெடா மற்றும் வதோதரா மாவட்டங்களில் சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியாகினர். மரம் விழுந்ததில் ஒருவரும், ஆனந்த் மாவட்டத்தில் இருவரும் நீரில் மூழ்கி இறந்தனர்.
வதோதராவில் 8,361 பேரும், பஞ்சமஹால்களில் 12,000-க்கும் அதிகமானோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவரை 23,870 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கடந்த இரண்டு நாள்களில் நவ்சாரியில் 1,200 பேரும், வல்சாத்தில் 800 பேரும், பரூச்சில் 200 பேரும், கெடாவில் 235 பேரும், பொடாட்டில் 200 பேரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்திய விமானப்படை மற்றும் கடலோர காவல்படையின் உதவியுடன் 300-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்.
மோர்பி மாவட்டத்தில் உள்ள மின்சார துணை மின்நிலையத்தில் பணிபுரிந்த 6 ஊழியர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டனர்.
வதோதராவில் கனமழை பெய்து அணைகளில் தண்ணீர் திறந்துவிடப்பட்டதைத் தொடர்ந்து, விஸ்வாமித்ரி ஆற்றின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை காலை அபாயக் கட்டத்தை 25 அடியைத் தாண்டியதால், தாழ்வானப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தின் தகவலின்படி, வதோதரா நகரில் திங்கள்கிழமை காலை 6 மணி முதல் 12 மணி வரை 307 மிமீ மழை பெய்துள்ளது. இதன் விளைவாக பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
விஸ்வாமித்ரி நதியின் நீர், அதிகாலையில் அபாயக் கட்டத்தைத் தாண்டி நகருக்குள் புகுந்ததால், சாயாஜிகஞ்ச், ஃபதேகஞ்ச், பர்சுராம் பத்தா, ஹர்னி, மோட்நாத் மற்றும் ஹர்னி-சாமா இணைப்புச் சாலை ஆகிய இடங்களில் வசிக்கும் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜாம்நகரின் லால்பூர் தாலுகாவிற்கு உள்பட்ட வாடி பகுதியில் சிக்கித் தவித்த குழந்தைகள் உள்பட 11 பேர் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்கப்பட்டனர்.
கட்ச் பகுதியில் சராசரி பருவ மழையில் 116.79 சதவீதமும், வடக்கு குஜராத்தில் 79.99 சதவீதமும், சௌராஷ்டிராவில் 101.52 சதவீதமும், தெற்கு குஜராத்தில் 108.20 சதவீதமும், மத்திய குஜராத்தில் 98.74 சதவீதமும் மழை பெய்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், 33 மாவட்டங்களில் உள்ள 251 தாலுகாக்களில் மழை பெய்துள்ளது, மோர்பி மாவட்டத்தில் உள்ள தங்கரா தாலுகா அதிகபட்சமாக 347 மி.மீ. பதிவாகியுள்ளது.
செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் 12 மணி நேரத்தில், ராஜுகோட் தாலுகாவில் 201 மி.மீ., ராஜ்கோட் மாவட்டத்தின் லோதிகா தாலுகாவில் 196 மி.மீ., ராஜ்கோட்டில் உள்ள கோடா சங்கனியில் 191 மி.மீ., சௌராஷ்டிரா பகுதியில் உள்ள 18 மாவட்டங்களில் 100 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
96 அணைகளில் அபாய அளவைத் தாண்டி நீர் பாய்ந்து வருவதாகவும், இதனால், மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் மாநில அரசு தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...