மகாராஷ்டிரத்தில் மாணவியை அடித்ததற்காக ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தின் சாகான் கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியில், ஆறு வயது சிறுமி ஒருவர், நன்றாக படிக்கவில்லை என்றும், படிப்பில் கவனமில்லை என்று கூறியும், சரிகா காக் என்ற ஆசிரியர் சிறுமியை அளவுகோலால் அடித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, வீட்டுக்கு வந்த சிறுமி, ஆசிரியர் அடித்து விட்டதாக, தனது தாயாரிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து, சிறுமியின் தாயார், மன்பாடா காவல் நிலையத்திற்கு சென்று ஆசிரியர் மீது புகார் அளித்துள்ளார்.
இந்த நிலையில், ஆசிரியர் மீது பாரதிய நியாயா சன்ஹிதா, குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.