மலையாள இயக்குநர் இரஞ்சித்
மலையாள இயக்குநர் இரஞ்சித்

உடைகளை களையச்சொல்லி.. மலையாள இயக்குநர் இரஞ்சித்துக்கு எதிராக இளைஞர் புகார்

உடைகளை களையச்சொல்லி புகைப்படம் எடுத்துக்கொண்டார் என மலையாள இயக்குநர் இரஞ்சித்துக்கு எதிராக இளைஞர் புகார் அளித்துள்ளார்.
Published on

கோழிக்கோடு: மலையாள இயக்குநர் இரஞ்சித், தனது உடைகளை களையச்சொல்லி, புகைப்படம் எடுத்துக்கொண்டதாக இளைஞர் ஒருவர் புகார் அளித்திருக்கிறார். அவரது வாக்குமூலத்தை சிறப்பு விசாரணைக் குழுவினர் பதிவு செய்துகொண்டனர்.

ஏற்கனவே, இரஞ்சித் மீது நடிகை புகார் கொடுத்திருக்கும் நிலையில், இளைஞர் அளித்த புகாரின் அடிப்படையில் புதிய வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இரஞ்சித் மீது இளைஞர் கொடுத்த புகாரில், கடந்த 2012ஆம் ஆண்டு பெங்களூருவில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதியில் தான் ரஞ்சித்தை சந்தித்ததாகவும், அப்போது தனது உடைகளை வலுக்கட்டாயமாக களையச்சொல்லி புகைப்படம் எடுத்துக் கொண்டதகாவும், பிறகு பாலியல் ரீதியாக துன்புறுத்தியதகாவும் கூறியிருக்கிறார்.

இளைஞரும் புகாரா?

அதாவது, பெங்களூருவில் உள்ள விடுதிக்கு, இயக்குநர்தான் தன்னை வரவழைத்ததாகவும் அங்கு சென்றபோது குடிக்க வற்புறுத்தியதாகவும் பிறகு, ஆடைகளைக் களையச் சொல்லி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் கூறியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஆடையின்றி எடுத்த தன்னுடைய புகைப்படங்களை அவர் தன்னுடைய பெண் தோழியும், மலையாள சினிமாவில் நடிகையாக இருப்பவருமான ஒருவருக்கு அனுப்பியிருப்பதாக ரஞ்சித் தன்னிடம் கூறியதாகவும் அந்த இளைஞர் குறிப்பிட்டுள்ளார். இதற்குரிய ஆதாரங்களுடன் அவர் விசாரணைக் குழுவிடம் தனது புகாரை அளித்துள்ளார்.

மலையாள இயக்குநர் இரஞ்சித்
18 நாள்கள் விசாரணை.. வழக்குப் பதியும் வரை கொலை பற்றி தெரியாது: சந்தீப் கோஷ்

மேலும், துணை நடிகைகளில் ஒருவர், மலையாள திரையுலகைச் சேர்ந்த எடவேல பாபு தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக அளித்த புகாரையும் சிறப்பு விசாரணைக் குழு பதிவு செய்துள்ளது.

பெண்களின் பாலியல் புகாா்கள் குறித்து விசாரணை நடத்த காவல்துறை அதிகாரிகள் 7 போ் அடங்கிய சிறப்புக் குழுவை கேரள அரசு ஞாயிற்றுக்கிழமை அமைத்திருந்தது. இந்த சிறப்புக் குழு, புகார் அளித்த நடிகைகள் மற்றும் இளைஞரிடம் விசாரணை நடத்தி அவர்கள் அளித்த வாக்குமூலங்களை பதிவு செய்து வருகிறது.

கடந்த 2017-ஆம் ஆண்டில் மலையாள நடிகையொருவா் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட வழக்கில் கேரள அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி ஹேமா தலைமையிலான குழுவின் அறிக்கை கடந்த வாரம் வெளியாகி, மலையாள திரையுலகில் சூறாவளியை ஏற்படுத்தியிருக்கிறது.

மலையாள திரையுலகில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் மற்றும் சீண்டல்களை வெளிப்படுத்திய அந்த அறிக்கையில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.

நீதிபதி ‘ஹேமா குழு’ அறிக்கையின் தொடா்ச்சியாக மலையாள திரையுலகத்தைச் சோ்ந்த பெண்கள் பலரும் அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்