

மகாராஷ்டிர துணை முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்பார் என்று சிவசேனை தலைவர் உதய் சமந்த் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர காபந்து முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுடனான சந்திப்புக்குப் பிறகு இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.
மகாராஷ்டிர துணை முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்பாரா என்ற சந்தேகம், முதல்வர் பதவியேற்பு விழாவுக்கு சற்று நிமிடம் முன்பு வரை நீடித்து வந்த நிலையில் இந்த தகவலை உறுதி செய்திருக்கிறார் ஏக்நாத் ஷிண்டே.
இது குறித்து அவர் கூறுகையில், ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வராக பதவியேற்பார். தேவேந்திர ஃபட்னவீஸ் உடன் ஆலோசனை நடத்தினோம், அப்போது ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வராக பதவியேற்பதற்கான உறுதிக் கடிதம் அளிக்கப்பட்டது. இதனை ஆளுநரிடம் சமர்ப்பிக்கவிருக்கிறோம் என்று ஆளுநர் மாளிகைக்கு வெளியே நின்றிருந்த செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
முன்னதாக, ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வர் பதவியை ஏற்காவிட்டால், சிவசேனை எம்எல்ஏக்கள் யாரும் அமைச்சர் பதவியை ஏற்க மாட்டார்கள் என்று கூறியிருந்தார்.
இன்று காலை செய்தியாளர்களிடம் பேசுகையில் கூட, மாநில அரசில், சிவசேனை கட்சியின் பங்கினை உறுதிசெய்யும் வகையில், அவர் துணை முதல்வராக பதவியேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார் சமந்த்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.