தில்லியில் பறக்கும் பட்டாம்பூச்சிகள், வீட்டில் உலவும் பல்லிகள்: நல்ல அறிகுறி இல்லையாம்!

புது தில்லியில் பட்டாம்பூச்சிகள் பறப்பது நல்ல அறிகுறி இல்லை என தகவல்.
புது தில்லியில்.. கோப்புப்படம்
புது தில்லியில்.. கோப்புப்படம்Center-Center-Delhi
Published on
Updated on
2 min read

புது தில்லி: கடந்த ஒரு சில மாதங்களாக நாள்தோறும் புது தில்லி அதன் காற்று மாசுவால் முக்கிய செய்தியில் இடம்பெற்று வருகிறது. அந்த வகையில் மற்றொரு மோசமான செய்தியுடன் தில்லி இன்று தலைப்புச் செய்தியாகியிருக்கிறது.

தற்போது டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தைக் கடந்துகொண்டிருக்கிறோம். ஆனால், புது தில்லியில் பல இடங்களில் பட்டாம்பூச்சிகள் பறந்துகொண்டிருக்கின்றன. ஆனால் அது நல்ல அறிகுறி இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

புது தில்லியில் கடுமையான குளிர் நிலவ வேண்டிய டிசம்பர் மாதத்தில் பட்டாம்பூச்சிகள் பறந்துகொண்டிருக்கிறது என்றால், தற்போது ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தின் காலநிலைதான் நகரில் நிலவுகிறது என்று பொருள். இந்த முரண்பாடு பட்டாம்பூச்சிகளுடன் நின்றுவிடவில்லை.

வீட்டின் சுவர்களில் பல்லிகள் ஊர்ந்துசென்றுகொண்டிருக்கின்றன. அத்திமர வகை மற்றும் சூடுகொட்டை மரங்கள் இன்னமும் பசுமையாகவே இருக்கின்றன. கொசுக்கள் இன்னமும் இனப்பெருக்கம் செய்கின்றன. மக்களை கடித்துத்துக்கொண்டிருக்கின்றன.

இவையெல்லாம், வழக்கமாக அக்டோபரில் தொடங்கி நவம்பரைக் கடந்து டிசம்பரைத் தொடும்போது தொட்டிருக்க வேண்டிய குளிர்நிலையை இன்னமும் தில்லி அடையவில்லை என்பதையே காட்டுவதாகவும், இது கவலை தரும் தகவல் என்றும் கூறுகிறார்கள்.

அதாவது, கொசுக்களின் இனப்பெருக்கம், மரங்கள் இலையை உதிர்ப்பது தாமதம், இனப்பெருக்கத்துக்காக வரும் பறவைகள் வராமலிருப்பது போன்றவை, சுற்றுச்சூழல் சீர்குலைவின் மிக மோசமான அறிகுறியாகவே இருப்பதாகக் கூறுகிறார்கள்.

இயற்கை மற்றும் காடுகளின் நலனுக்கு குளிர்காலம் என்பது மிகவும் அவசியம். இந்த குளிர்காலத்தில்தான் பூமி தனது வெப்பநிலையை சமன்செய்துகொள்கிறது. பனிக்கட்டிகள் பூமி மீது படர்ந்து பிறகு அது உருகி ஆறுகளில் பாய்ந்து பூமிக்கு உயிர்கொடுக்கிறது. இந்தக்காலத்தில் கரடி, பாம்புகள் உறக்கநிலையில் இருக்கும். இவை அவற்றின் வாழ்முறை சுழற்சி, சக்தியை மீட்டெடுக்கும் முறை. ஆனால் இந்த ஆண்டு டிசம்பர் வரை குளிர் தொடவில்லை. வெதுவெதுப்பான காலநிலையே நிலவுகிறது. யமுனை நதிக்கரையோரம் உள்ள பல்லுயிர் பூங்காவில் ஒரு மரம் கூட இன்னமும் இலைகளை உதிர்க்கத் தொடங்கவேயில்லை என்கின்றன தகவல்கள்.

அதாவது குளிர்காலத்தில் மரங்களை இலைகளை உதிர்த்துவிட்டு உறங்கச் சென்றுவிடும். அப்போதுதான் அதன் சக்தியை அது சேமிக்க முடியும். பிறகு பூக்கவும் காய்க்கவும் அதற்கு சக்தி கிடைக்கும். அடுத்த குளிர்காலம் வரை தாக்குப்பிடிக்கும். ஆனால், குளிர்காலம் தொடங்காததால், இவை அனைத்தும் உறக்க நிலைக்குச் செல்லாததால் பல்லுயிர்ப் பெருக்கமும் பாதிக்கப்படும் என்று எச்சரிக்கிறார்கள் சுற்றுச்சூழல் நிபுணர்கள்.

பொதுவாகவே இந்த குளிர்காலத்தில் பல தொற்று நோய்கள் பரவுவது குறைந்துவிடும். ஆனால், இந்த ஆண்டு இதுவரை தொற்று நோய்கள் பரவி வருகின்றன. அதற்குக் காரணம் குளிர்காலம் வேகமெடுக்காததே பூச்சிகள் சாதாரணமாக வெளியே உலவுகின்றன. தொற்று நோய்கள் பரவுகின்றன என்கிறார்கள்.

குளிர்காலம் வந்துவிட்டால் பல்லிகள் மிக பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று உறக்கநிலையை எட்டிவிடும். ஆனால் இன்றுவரை வீடுகளில் பல்லிகள் உலவுகின்றன.

மரங்களின் இலைகள் உதிர்வது இருக்கட்டும் இன்னமும் பசுமையாகவே இருப்பதுதான் அதிர்ச்சியளிப்பதாகவும் மஞ்சள் நிறத்தைக் கூட அடையத் தொடங்கவில்லை என்றும் குறிப்பிடுகிறார்கள்.

குளிர்காலத்தில் நிலவும் தட்பவெப்பநிலை, பல்லுயிர்ப் பெருக்கத்தின் சுழற்சியை வெகுவாக பாதிக்கும் என்றும் எச்சரிக்கை விடுகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com