நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்பிக்காக ஒதுக்கப்பட்டிருந்த இருக்கையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கர் வெள்ளிக்கிழமை அவையில் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், மாநிலங்களவையில் உறுப்பினர்களின் இருக்கை ஒன்றில் கட்டுக்கட்டாக பணம் இருந்த விவகாரம் புயலைக் கிளப்பியிருக்கிறது.
அதாவது ஜகதீப் தன்கர் வெளியிட்ட அறிவிப்பில், மாநிலங்களவை கலைந்தவுடன் வழக்கமான சோதனைகள் நேற்று செய்யப்பட்டன. அப்போது, அபிஷேக் மனு சிங்விக்கு ஒதுக்கப்பட்டுள்ள இருக்கையில் இருந்து அதிகளவிலான பணம், பாதுகாப்பு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து என்னிடம் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் மனு சிங்வி, தெலங்கானா மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
புது தில்லி: நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில், காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் சிங்வியின் இருக்கையில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்ட விவகாரம் இன்று நாடாளுமன்றத்தை உலுக்கியிருக்கும் நிலையில் இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் எம்.பி.யின் இருக்கையில் பணம் இருந்தது குறித்து விசாரணை நடத்துமாறு மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் உத்தரவிட்டிருக்கிறார். ஆனால், எப்போதும் மாநிலங்களவைக்கு வரும் போது நான் என் கையில் ஒரே ஒரு 500 ரூபாய் நோட்டைத்தான் வைத்திருப்பேன் என்று அபிஷேக் சிங்வி பதிலளித்துள்ளார்.
இப்போதுதான் முதல் முறையாகக் கேள்விப்பட்டேன். தற்போதுவரை இது பற்றி எனக்குத் தெரியவில்லை. எப்போது மாநிலங்களவைக்கு வரும்போதும் ஒரே ஒரு 500 ரூபாய் நோட்டைத்தான் கொண்டு வருவேன். முதல் முறையாக இப்போதுதான் கேள்விப்படுகிறேன். நேற்று பகல் 12.57 மணிக்குத்தான் மாநிலங்களவைக்குள் நுழைந்தேன். 1 மணிக்கு அவை முடிந்தது. அதன் பிறகு 1.30 மணி வரை நான் நாடாளுமன்ற உணவகத்தில்தான் அமர்ந்திருந்தேன். அதன்பிறகு நாடாளுமன்றத்திலிருந்து வீடு திரும்பினேன் என்று சிங்வி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்பிக்காக ஒதுக்கப்பட்டிருந்த இருக்கையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கர் வெள்ளிக்கிழமை அவையில் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், மாநிலங்களவையில் உறுப்பினர்களின் இருக்கை ஒன்றில் கட்டுக்கட்டாக பணம் இருந்த விவகாரம் புயலைக் கிளப்பியிருக்கிறது.
அதாவது ஜகதீப் தன்கர் வெளியிட்ட அறிவிப்பில், மாநிலங்களவை கலைந்தவுடன் வழக்கமான சோதனைகள் நேற்று செய்யப்பட்டன. அப்போது, அபிஷேக் மனு சிங்விக்கு ஒதுக்கப்பட்டுள்ள இருக்கையில் இருந்து அதிகளவிலான பணம், பாதுகாப்பு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து என்னிடம் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் மனு சிங்வி, தெலங்கானா மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.