நடப்பாண்டு 11.70 லட்சம் குழந்தைகள் பள்ளிக் கல்வி பெறவில்லை: மத்திய அமைச்சா் தகவல்

நாட்டில் நடப்பாண்டில் 11.70 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் பள்ளிக் கல்வியைப் பெறவில்லை
Published on

புது தில்லி: நாட்டில் நடப்பாண்டில் 11.70 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் பள்ளிக் கல்வியைப் பெறவில்லை என்று மத்திய கல்வித் துறை இணையமைச்சா் ஜெயந்த் சௌதரி திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துபூா்வமாக ஜெயந்த் சௌதரி அளித்த பதில்:

இந்தியாவில், 2024-25 நிதியாண்டின் முதல் 8 மாதங்களில் 11,70,404 குழந்தைகள் பள்ளிக் கல்வியைப் பெறவில்லை. அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 7.84 லட்சம் குழந்தைகளும், ஜாா்க்கண்ட் மாநிலத்தில் 65,000 குழந்தைகளும், அஸாமில் 63,000 குழந்தைகளும் பள்ளிக் கல்வியைப் பெறவில்லை.

இந்தத் தரவைக் கண்காணிக்கவும் புதுப்பிக்கவும் கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் பிரபந்த் (திட்ட மதிப்பீடு, பட்ஜெட், சாதனைகள் மற்றும் தரவு கையாளுதல் அமைப்பு) இணையதளம் பயன்படுத்துகிறது என தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com