தில்லி பேரவைத் தேர்தல்: ஆம் ஆத்மியின் 2-ம் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட ஆம் ஆத்மி..
2-ம் வேட்பாளர் பட்டியல்
2-ம் வேட்பாளர் பட்டியல்dot com
Published on
Updated on
1 min read

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 20 வேட்பாளர்களின் இரண்டாம் கட்ட பட்டியலை ஆம் ஆத்மி கட்சி திங்கள்கிழமை வெளியிட்டது.

இப்பட்டியலில் அக்கட்சியின் தற்போது எம்எல்ஏக்களாக உள்ள 18 பேர் நீக்கப்பட்டு, புதிதாக 18 சேர்க்கப்பட்டுள்ளனர். மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான மணீஷ சிசோடியா உள்ளிட்ட இரண்டு பேர் வெவ்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

தில்லி சட்டப்பேரவையின் 70 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்தாண்டு பிப்ரவரியில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், முதல் கட்டமாக 11 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியல் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தில்லி அமைப்பாளரும் அமைச்சருமான கோபால் ராய் வெளியிட்டார்.

ஜங்புரா தொகுதியில் மணீஷ் சிசோடியாவும், அதேநேரத்தில் கல்வியாளரும், சமீபத்தில் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தவருமான அவத் ஓஜா சிசோடியாவின் தற்போதைய பட்பர்கஞ்ச் தொகுதியில் போட்டியிடுகிறார்.

எனக்கு அரசியல் என்பது கல்வி, நேர்மை மற்றும் பொதுநலத்திற்கான ஒரு வழியாகும். பட்பர்கஞ்சில் செய்யப்பட்ட பணியை ஜங்புராவில் செய்ய நான் தயாராக இருக்கிறேன் என்று சிசோடியா கூறினார்.

சிசோடியா வேறு தொகுதிக்கு மாறியது குறித்து கருத்து தெரிவித்த தில்லி கோபால் ராய், மணீஷ் சிசோடியா தில்லியில் எங்கு சென்றாலும் வெற்றியடையக்கூடிய திறன் கொண்டவர்.

இரண்டாவது பட்டியலில் வேட்பாளராகப் பெயரிடப்பட்ட மற்றொரு எம்எல்ஏ துணை அவை தலைவர் ராக்கி பிர்லா. அவர் மங்கோல்புரியில் இருந்து மடிபூருக்கு மாற்றப்பட்டார். ராகேஷ் ஜாதவ் தரம்ரக்ஷக் அவரது தற்போதைய தொகுதியில் போட்டியிடுகிறார்.

மடிபூர் எம்எல்ஏ கிரிஷ் சோனி நீக்கப்பட்டுள்ளார். நரேலா எம்எல்ஏ சரத் குமார் சௌகானுக்கு பதிலாக தினேஷ் பரத்வாஜும், திமர்பூர் எம்எல்ஏவும், கட்சியின் தலைமை கொறடாவுமான திலீப் கே பாண்டேவுக்கு பதிலாக சுரேந்திர பால் சிங் பிட்டு நியமிக்கப்பட்டுள்ளனர்.

பவன் ஷர்மாவுக்குப் பதிலாக, எம்சிடியின் தலைவரான முகேஷ் கோயல், ஆதர்ஷ் நகரிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளார். முண்ட்காவில் தரம்பால் லக்ராவுக்கு பதிலாக ஜஸ்பிர் கராலா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த மாற்றங்கள் கடின உழைப்பு மற்றும் செயல்திறனுக்கான கட்சியின் உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கின்றன என்று ஆம் ஆத்மி தலைவர்கள் கூறுகின்றனர்.

ஆம் ஆத்மி கட்சி 11 தொகுதிகளுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை நவம்பர் 21ஆம் தேதி வெளியிட்டது. தில்லி பேரவைத் தேர்தலுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், ஆம் ஆத்மி வேட்பாளர் பட்டியலை அறிவித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com