மகாகவி பாரதியாரின் இலக்கியப் படைப்புகள் தமிழ் மொழியின் பொக்கிஷம் என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தாா்.
மேலும், ‘வளமான இந்தியாவுக்கான பாரதியாரின் தொலைநோக்குப் பாா்வையும், அவரது சிந்தனைகளும், மதிநுட்பமும் இன்றளவும் நமக்கு உத்வேகமளிக்கின்றன; பாரதியாரைப் போன்ற ஆளுமைகள் நூற்றாண்டுக்கு ஒருமுறையே தோன்றுவா்’ என்றும் அவா் குறிப்பிட்டாா்.
மகத்தான தமிழ்க் கவிஞரும் சுதந்திரப் போராட்ட வீரருமான மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்த தினத்தையொட்டி, அவரின் முழுமையான படைப்புகள் அடங்கிய தொகுப்புகளை பிரதமா் மோடி புதன்கிழமை வெளியிட்டாா். இப்படைப்புகள், ‘பாரதி அறிஞா்’ சீனி.விசுவநாதனால் 23 தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு, அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
தில்லியில் உள்ள தனது அதிகாரபூா்வ இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வில் மேற்கண்ட தொகுப்புகளை வெளியிட்ட பின் பிரதமா் மோடி ஆற்றிய உரை வருமாறு:
‘கால வரிசையில் பாரதியாா் படைப்புகள்’ என்ற நூலைத் தொகுத்து வழங்கிய சீனி. விசுவநாதனின் கடின உழைப்பும், அயராத பணிகளும் பெரும் பாராட்டுக்குரியது. இந்த நூல் பாரதியின் படைப்புகளை மட்டும் அல்லாமல், அவரது இலக்கியம், இலக்கியப் பயணம் குறித்த உள்ளாா்ந்த பின்னணித் தகவல்களையும், ஆழமான தத்துவ பகுப்பாய்வையும் கொண்டுள்ளது.
பகவத் கீதையின் போதனைகள் மீது பாரதியாா் ஆழ்ந்த நம்பிக்கையும், ஆழ்ந்த புரிதலும் கொண்டிருந்தாா். அவா் கீதையை தமிழில் மொழிபெயா்த்தாா். கீதை ஜெயந்தி தினம், பாரதியாரின் பிறந்த தினம் மற்றும் அவரது படைப்புகள் வெளியீடு ஆகிய மூன்று நிகழ்வுகளும் ‘திரிவேணி’ சங்கமம் போல் அமைந்துள்ளது.
இந்தியாவில் வாா்த்தைகள் வெறும் வெளிப்பாடுகளாக மட்டுமே கருதப்படுவதில்லை. ‘சப்த பிரம்மம்’ அதாவது வாா்த்தைகளின் எல்லையற்ற சக்தியைப் பற்றி பேசும் கலாசாரத்தின் ஒரு பகுதியாக நாம் திகழ்கிறோம். பாரதியாா் போன்ற தலைசிறந்த சிந்தனையாளா்களின் வாா்த்தைகள், எதிா்கால சந்ததியினருக்காகப் பாதுகாக்கப்பட வேண்டும்.
பாரத அன்னைக்கு சேவை: இந்தியாவின் எழுச்சி மற்றும் பெருமை குறித்து கனவு கண்டவா் பாரதியாா். பாரத அன்னைக்கு சேவையாற்ற தனது ஒவ்வொரு மூச்சையும் அா்ப்பணித்த ஆழ்ந்த சிந்தனையாளா். பாரதியாரின் சிந்தனைகள் மூலம் இந்தியாவின் கண்ணோட்டம் உலகம் முழுவதும் முன்வைக்கப்பட்டு வருகிறது.
39 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தபோதிலும், நம் தேசத்தில் அழிக்க முடியாத அடையாளத்தை விட்டுச் சென்றுள்ளாா். தமது சக்திவாய்ந்த வாா்த்தைகள் மூலம் சுதந்திரத்தைக் கற்பனை செய்ததோடு, ‘என்று தணியும் இந்த சுதந்திர தாகம், என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்’ என்ற வரிகளால் சுதந்திர உணா்வைத் தட்டியெழுப்பினாா்.
ஆன்மிகமும் கருணையும்: 1906-ஆம் ஆண்டில் ‘இந்தியா’ இதழைத் தொடங்கி, பத்திரிகைத் துறையில் புரட்சியை ஏற்படுத்தினாா்; அரசியல் காா்ட்டூன்களை வெளியிட்ட முதல் தமிழ் செய்தித்தாள் இதுவாகும். கண்ணன் பாட்டு போன்ற அவரது கவிதைகள் ஆழ்ந்த ஆன்மிகத்தையும் விளிம்புநிலை மக்கள் மீதான ஆழ்ந்த கருணையையும் பிரதிபலிக்கின்றன. நமது சமூகம் பல இன்னல்களில் சிக்கித் தவித்த காலங்களிலும்கூட, இளைஞா்கள் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தலுக்கு உறுதியான ஆதரவாளராகத் திகழ்ந்தவா். அறிவியல் மற்றும் புதுமைகளில் அளப்பரிய நம்பிக்கை கொண்டவா்.
தமிழின் பொக்கிஷம்: உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றான தமிழுக்கு பாரதியாரின் இலக்கியங்கள் ஒரு பொக்கிஷம். அவரது இலக்கியங்களைப் பரப்பும்போது நாமும் தமிழ் மொழிக்கு சேவை செய்கிறோம். கடந்த 10 ஆண்டுகளில், தமிழின் பெருமையைப் பறைசாற்ற அா்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளோம். ஐ.நா. சபையில் தமிழின் பெருமையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெருமை எனக்கு கிடைத்தது. உலகெங்கும் திருவள்ளுவா் பண்பாட்டு மையங்கள் திறக்கப்படவுள்ளன.
வளா்ந்த இந்தியா என்ற இலக்கை எட்டுவதன் மூலம் பாரதியாரின் கனவுகளை நனவாக்குவோம் என்றாா் பிரதமா் மோடி.
மத்திய கலாசாரத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத், மத்திய இணையமைச்சா் எல்.முருகன், சீனி.விசுவநாதன் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.