ஆம் ஆத்மியின் இறுதிகட்ட வேட்பாளா் பட்டியல்: நியூ தில்லி தொகுதியில் கேஜரிவால் போட்டி

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்கள் அடங்கிய இறுதிகட்ட வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி ஞாயிற்றுகிழமை வெளியிட்டது.
அரவிந்த் கேஜரிவால்(கோப்புப்படம்)
அரவிந்த் கேஜரிவால்(கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்கள் அடங்கிய இறுதிகட்ட வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி ஞாயிற்றுகிழமை வெளியிட்டது.

அதில் நியூ தில்லி தொகுதியில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் தற்போதைய முதல்வர் அதிஷி மீண்டும் கல்காஜியிலும், சௌரப் பரத்வாஜ் கிரேட்டர் கைலாஷ் தொகுதியிலும் போட்டியிட உள்ளனர்.

தில்லி சட்டப்பேரவையின் 70 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்தாண்டு பிப்ரவரியில் நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்க ஆளும் ஆம்ஆத்மி கட்சி தற்போது இருந்தே தயாராகி வருகிறது.

தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே அக்கட்சி ஏற்கெனவே 3கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

குகேஷுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!

இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலில் மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான மணீஷ சிசோடியா ஜங்புரா தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.

கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற தில்லி பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருந்தது.

அதாவது மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளை ஆம் ஆத்மி கைப்பற்றியது. பாஜக 8 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் ஓரிடத்திலும் வெற்ற பெற முடியவில்லை. தொடர்ந்து அரவிந்த் கேஜரிவால் தில்லி முதல்வரானார்.

பின்னர் தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் கைதான கேஜரிவால் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார்.

அதைத்தொடர்ந்து தில்லி முதல்வராக அதிஷி நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com