விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை கூட்டுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும்: டி.ஆர். பாலு

ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு திமுக எதிர்ப்பு...

News image
டி.ஆர். பாலு- sansad
Updated On :17 டிசம்பர் 2024, 7:09 am

DIN

நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு திமுக எம்பி டி.ஆர்.பாலு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

‘ஒரே நாடு; ஒரே தோ்தல்’ நடைமுறைக்கான இரு மசோதாக்களையும் மக்களவையில் சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இன்று தாக்கல் செய்தார்.

இந்த மசோதாவுக்கு காங்கிரஸ், சமாஜவாதி, திரிணமூல், திமுக உள்ளிட்ட கட்சிகளின் மக்களவை உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து பேசி வருகின்றனர்.

திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு பேசியதாவது:

“அரசியல் சாசன திருத்தம் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதுபோல், ஜனநாயகத்தை அழிப்பது போன்று உள்ளது. அரசுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இல்லாதபோது எப்படி மசோதாவை நிறைவேற்றுவீர்கள்.

வாக்காளர்கள் வாக்களித்து 5 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்ய முடியும். இந்த உரிமையை பறிக்க முடியாது. அனைத்து அரசியல் கட்சிகளின் கருத்து ஒற்றுமை என்பது கடினமாக இருக்கும் என்பதால் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியமற்றது என்று 2015-ல் தாக்கல் செய்யப்பட்ட 9வது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை கூட்டுக்குழுவின் விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டு பரிசீலனை செய்ய வேண்டும். அதன்பிறகு விவாதத்துக்கு அவைக்கு கொண்டு வரவேண்டும்” எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.