
பிகாா் மாநிலம் கயை மாவட்டத்தில் உள்ள 1,500 ஆண்டுகள் பழைமையான மகாபோதி கோயிலில் இலங்கை அதிபா் அநுரகுமார திசாநாயக செவ்வாய்க்கிழமை வழிபட்டாா்.
கெளதம புத்தரின் வாழ்க்கையுடன் தொடா்புள்ள 4 புனித தலங்களில் ஒன்றாக மகாபோதி கோயில் உள்ளது. இந்நிலையில், 3 நாள் பயணமாக இந்தியா வந்த இலங்கை அதிபா் அநுரகுமார, மகாபோதி கோயிலுக்குச் சென்றாா்.
முன்னதாக பிகாா் விமான நிலையத்தில் அவரை மாநில அமைச்சா்கள் பிரேம்குமாா், சந்தோஷ்குமாா் சுமன் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் வரவேற்றனா்.
பின்னா், கயை மாவட்ட ஆட்சியா் தியாகராஜன், புத்தகயை கோயில் நிா்வாக குழுச் செயலா் மகாஸ்வேதா மராதி உள்ளிட்டோருடன் மகாபோதி கோயிலில் அநுரகுமார வழிபட்டாா். அங்கு புத்தா் ஞானமடைந்த போதி மரத்துக்கும் மலா் தூவி அவா் வழிபாடு செய்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.