அதானியைவிட 2.5 மடங்கு சரிவைக் கண்ட அம்பானி!

கடந்த பத்தாண்டுகளில் இல்லாத வகையில் முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு கடுமையாக சரிந்தது.
முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானிகோப்புப் படம்
Published on
Updated on
1 min read

கடந்த பத்தாண்டுகளில் இல்லாத வகையில் முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு கடுமையாக சரிந்து வருகிறது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் சந்தை மூலதனம், ஜூலையில் அதன் உச்சநிலையிலிருந்து ரூ. 4.4 லட்சம் கோடிக்குமேல் குறைந்துள்ளது. பங்குகள் அவற்றின் அதிகபட்சப் புள்ளியான ரூ.1,608.95-லிருந்து கிட்டத்தட்ட 21 சதவிகிதம் சரிந்தன.

உலகளாவிய கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள், சந்தை ஏற்ற இறக்கங்கள், பொருளாதார நிச்சயமற்ற தன்மை உள்ளிட்ட பல காரணங்களால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், தற்போது சில அழுத்தங்களை எதிர்கொண்டு வருகிறது. இந்த காரணங்களால்தான் அம்பானியின் நிகர மதிப்பு சரிந்துள்ளது.

கடந்த 5 மாத காலத்தில் இவருடைய சொத்து மதிப்பு 9.8 பில்லியன் டாலர் குறைந்துள்ளது. முகேஷ் அம்பானி, சுமார் ரூ. 2 லட்சம் கோடி சரிவைச் சந்தித்தாலும் பில்லியனர் இன்டெக்ஸ் பட்டியலில் தொடர்ந்து தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

அவரது மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தின் போது ஜூலையில் 120.8 பில்லியன் டாலர் என்ற உச்சத்தில் இருந்த அவரது நிகர மதிப்பு, டிசம்பர் 13 ஆம் தேதி வரை 96.7 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. இதன்காரணமாக, 100 பில்லியன் டாலர் மதிப்பு கொண்டவர்கள் பட்டியலில் அம்பானி விலகியுள்ளதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், மற்றொரு இந்திய பணக்காரரான கௌதம் அதானியின் நிகர மதிப்பும் சரிவைக் கண்டுள்ளது. இருப்பினும், அதானியின் நிகர மதிப்பு 9.8 பில்லியன் டாலர் மட்டுமே சரிந்துள்ளது. அதானின் இழப்பைவிட அம்பானியின் இழப்பு கிட்டத்தட்ட 2.5 மடங்கு அதிகமாகும்.

இருப்பினும், இந்தாண்டில் ஷிவ் நாடார் சொத்து மதிப்பு 10.8 பில்லியன் டாலரும், சாவித்ரி ஜிண்டாலின் சொத்து மதிப்பு 10.1 பில்லியன் டாலரும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com