ஐபிஎல் மூலம் அஸ்வினுக்கு ரூ. 97.2 கோடி!!

கிரிக்கெட் வீரர் அஸ்வினின் ஐபிஎல் போட்டிகளின் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
ரவிச்சந்திரன் அஸ்வின்
ரவிச்சந்திரன் அஸ்வின்Instagram | Ashwin
Published on
Updated on
1 min read

கிரிக்கெட் வீரர் அஸ்வினின் ஐபிஎல் போட்டிகளின் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அனைந்து விதமான சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.

2011 ஆம் ஆண்டு தில்லியில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். 2024 ஆண்டு தகவலின்படி, இவரது நிகர சொத்து மதிப்பு ரூ. 132 கோடி வரையில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இவர் 2008 ஆம் ஆண்டு முதல் வரவிருக்கும் 2025 ஆண்டுவரையில் ஐபிஎல் ஆட்டங்கள் மூலம் கிடைத்த சம்பளங்கள் குறித்த விவரங்கள்: 2008 முதல் 2010 வரையில் சென்னை அணிக்காக ரூ. 12 லட்சம் சம்பளம் வாங்கினார்; தொடர்ந்து சென்னை அணியிலேயே இருந்து வந்த அஸ்வின், 2011 முதல் 2013 வரையில் ரூ. 3.91 கோடியும், 2014 ஆண்டில் ரூ. 7.50 கோடியும் வாங்கினார்.

இதனைத் தொடர்ந்து, 2016 - 17 ஆம் ஆண்டில் புணே அணிக்காக விளையாடிய அஸ்வின், அங்கும் ரூ. 7.50 கோடியே வாங்கினார். 2018 - 19ல் பஞ்சாப் அணியில் ரூ. 7.60 கோடியும், 2020 - 21ல் தில்லி அணியிலும் ரூ. 7.60 கோடியே வாங்கினார். தொடர்ந்து, 2022 முதல் 2024 வரையில் ராஜஸ்தான் அணியில் இருந்த அஸ்வின், ரூ. 5 கோடி பெற்று வந்தார்.

இந்த நிலையில், வரவிருக்கும் 2025 ஆம் ஆண்டு ஐபிஎல்லில் மீண்டும் சென்னை அணியிலேயே விளையாடவிருக்கும் அஸ்வின், இந்த முறை ரூ. 9.75 கோடி சம்பளம் பெற்றுள்ளார். இவர், இதுவரையில் ஐபிஎல் சீசன் மூலம் பெற்றுள்ள மொத்த சம்பளம் ரூ. 97 கோடியே 24 லட்சம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த 38 வயதான சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச போட்டிகளில் இதுவரை மொத்தமாக 765 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதுவரை அதிகபட்சமாக 11 முறை தொடர்நாயகன் விருதை வென்றுள்ளார்.

மைந்த்ரா, பாம்பே ஷேவிங் கம்பெனி, மன்னா ஃபுட்ஸ், அரிஸ்டோக்ராட் பேக்ஸ், ஓப்போ, மூவ், ட்ரீம் 11 முதலானவற்றில் ஒப்பந்தம் செய்யப்பட்டதன் மூலமும் அஸ்வின் சம்பாதித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com