பாஜக, ஆர்எஸ்எஸ் மூவர்ணக் கொடிக்கு எதிரானது: கார்கே விமர்சனம்

பாஜக-ஆர்எஸ்எஸ் மூவர்ணக் கொடிக்கு எதிரானது என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே
Published on
Updated on
1 min read

புதுதில்லி: பாஜக-ஆர்எஸ்எஸ் மூவர்ணக் கொடிக்கு எதிரானது என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்துள்ளார்.

மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி 2 நாள் விவாதத்தின் முடிவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்’ என முழக்கமிடுவது இப்போது காங்கிரஸ் கட்சியினருக்கு வழக்கம் ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை உச்சரித்திருந்தால், அவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைத்திருக்கும்.

மேலும் அம்பேத்கரின் பெயரை காங்கிரஸ் சொல்வதில் பாஜக மகிழ்ச்சியடைகிறது. ஆனால் அம்பேத்கரின் உண்மையான உணர்வுகளையும் காங்கிரஸ் பேச வேண்டும் என்று அமித் ஷா கூறினார்.

இந்த நிலையில், அம்பேத்கரின் பெயரை சொல்வது காங்கிரஸ் கட்சிக்கு வழக்கமாகிவிட்டதாக கூறிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ், அம்பேத்கரை அவமதித்ததற்காக அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து மக்களவை எதிரிக்கட்சி தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் வலைதள பக்க பதிவில், மனுஸ்மிருதி மீது நம்பிக்கை உள்ளவர்களுக்கு அம்பேத்கரால் நிச்சயம் பிரச்னை வரும் என பதிவிட்டுள்ளார்

மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்டுள்ள பதிவில், உள்துறை அமைச்சரின் அம்பேத்கர் அவமதிப்பு, பாஜக-ஆர்எஸ்எஸ் ஆகியவை மூவர்ணக் கொடிக்கு எதிரானது என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது, அவர்களது அரசியல் முன்னோர்கள் அசோக் சக்ராவை எதிர்த்தனர், சங்கபரிவார் மக்கள் மனுஸ்மிருதியை அமல்படுத்தவும்,இந்திய அரசியலமைப்பிற்கு எதிராகவும் நின்றார்கள். ராம்லீலா மைதானத்தில் அரசியல் சாசன நகல்களை எரித்தனர்.

தற்போது அவர்களது தந்திரம் இந்திய மக்களால் முறியடிக்கப்பட்டதும், விரக்தியில், அவர்கள் அம்பேத்கர் மற்றும் அவரது புகழ்பெற்ற பங்களிப்பை அவமதிக்கிறார்கள்.

அம்பேத்கரின் பாரம்பரியம், நாடாளுமன்ற ஜனநாயகம் மற்றும் நமது அரசியலமைப்பு மீதான இந்தத் தாக்குதலை நாடு எதிர்க்கும்.

அம்பேத்கரை இழிவுபடுத்தியதற்காக உள்துறை அமைச்சர் அமித்ஷா நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், அமைச்சர் பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என கார்கே வலியுறுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com