2025-ல் எந்தப் பங்குகளை வாங்கலாம்? ஐசிஐசிஐ செக்யூரிட்டிஸ் பரிந்துரைக்கும் 28% லாபம் தரும் பங்குகள்!

அடுத்தாண்டில் வாங்குவதற்கு உகந்த பங்குகளாக சில பங்குகளை ஐசிஐசிஐ செக்யூரிட்டிஸ் பரிந்துரைத்துள்ளது.
2025-ல் எந்தப் பங்குகளை வாங்கலாம்? ஐசிஐசிஐ செக்யூரிட்டிஸ் பரிந்துரைக்கும் 28% லாபம் தரும் பங்குகள்!
Published on
Updated on
2 min read

அடுத்தாண்டில் 28 சதவிகிதம் வரையில் லாபம் தரும் வாங்குவதற்கு உகந்த பங்குகளாக சில பங்குகளை ஐசிஐசிஐ செக்யூரிட்டிஸ் பரிந்துரைத்துள்ளது.

நடப்பாண்டின் இரண்டாம் பாதி பங்குச் சந்தைக்கு சாதகமாக இல்லாதவிடினும், ஐசிஐசிஐ செக்யூரிட்டிஸ் என்ற நிறுவனத்தின் நிஃப்டி 24,800 மைல்கல்லை எட்டியுள்ளது. மேலும், அடுத்தாண்டில் 28,800 என்ற நிலையை அடையத் தயாராக உள்ளதாகவும் கூறியுள்ளது. அடுத்தாண்டில் வாங்குவதற்கும் சில பங்குகளையும் பரிந்துரைத்துள்ளது.

யுனைடெட் ஸ்பிரிட்ஸ் (United Spirits)

இந்த நிறுவனப் பங்கின் வாங்கும் விலை ரூ. 1490 முதல் ரூ. 1570-ஆக உள்ளது. பங்கின் இலக்கு விலை ரூ. 1820-ஆகவும், லாப விகிதம் 15.4 சதவிகிதமாகவும் உள்ளது. இந்த நிறுவனத்தின் தற்போதைய வர்த்தக விலை ரூ.1,569.50 என்ற நிலையில் உள்ளது.

இந்தியன் வங்கி (Indian Bank)

இந்த நிறுவனத்தின் பங்கு வாங்கும் விலை: ரூ.555 - ரூ.585, பங்கு இலக்கு விலை: ரூ.705, லாப விகிதம்: 20.5 சதவிகிதமாக உள்ளது. பங்கின் தற்போதைய வர்த்தக விலை: ரூ.552.90 என்ற நிலையில் உள்ளது.

டிம்கென் இந்தியா லிமிடெட் (Timken India Ltd)

இந்த நிறுவனத்தின் பங்கு வாங்கும் விலை: ரூ.3050 - ரூ.3160, பங்கு இலக்கு விலை: ரூ.3950, லாப விகிதம்: 25 சதவிகிதம், பங்கின் தற்போதைய வர்த்தக விலை: ரூ.3192.85 என்ற நிலையில் உள்ளது.

சிஇஎஸ்சி லிமிடெட் (CESC Ltd)

மின்சார உற்பத்தி நிறுவனமான இந்த நிறுவனத்தின் பங்கையும், வாங்கும் பங்கு பட்டியலில் இணைக்க ஐசிஐசிஐ செக்யூரிடீஸ் பரிந்துரைத்துள்ளது. இந்த நிறுவனப் பங்கு வாங்கும் விலை: ரூ.180 - ரூ.194, பங்கு இலக்கு விலை: ரூ.235, லாப விகிதம்: 23.7 சதவிகிதமாக உள்ளது. பங்கின் தற்போதைய வர்த்தக விலை: ரூ.187 என்ற அளவில் உள்ளது.

பிஇஎம்எல் லிமிடெட் (BEML Ltd)

கனரக உபகரணங்கள் மற்றும் இயந்திரங்கள் உற்பத்தி நிறுவனமான இந்த நிறுவனத்தின் பங்கு வாங்கும் விலை: ரூ. 4250 - ரூ. 4450, பங்கு இலக்கு விலை: ரூ. 5390, லாப விகிதம்: 21 சதவிகிதமாக உள்ள நிலையில் பங்கின் தற்போதைய வர்த்தக விலை: ரூ. 187 என்ற அளவில் உள்ளது.

ஜேகே லக்ஷ்மி சிமிண்ட் லிமிடெட் (JK Lakshmi Cement Ltd)

இந்த நிறுவனத்தின் பங்கை, வாங்கும் பங்கு பட்டியலில் இணைக்க ஐசிஐசிஐ செக்யூரிடீஸ் பரிந்துரைத்துள்ளது.

இதன் பங்கு வாங்கும் விலை: ரூ. 820 - ரூ. 875, பங்கு இலக்கு விலை: ரூ. 994, லாப விகிதம்: 13.6 சதவிகிதமாகவும், பங்கின் தற்போதைய வர்த்தக விலை: ரூ. 867.55 என்றும் உள்ளது.

ராலீஸ் இந்தியா லிமிடெட் (Rallis India Ltd)

வேளாண் ரசாயன நிறுவனமான இந்நிறுவனத்தின் பங்கை, வாங்கும் பங்கு பட்டியலில் இணைக்க ஐசிஐசிஐ செக்யூரிடீஸ் பரிந்துரைத்துள்ளது.

இந்நிறுவனத்தின் பங்கு வாங்கும் விலை: ரூ. 290 - ரூ. 310, பங்கு இலக்கு விலை: ரூ.375, லாப விகிதம்: 21 சதவிகிதமாகவும், பங்கின் தற்போதைய வர்த்தக விலை: ரூ.300 என்ற நிலையிலும் உள்ளது.

எந்தவொரு முதலீட்டு முடிவுகளையும் எடுப்பதற்கு முன்பு சான்றளிக்கப்பட்ட நிபுணர்களுடன் சரிபார்க்குமாறு பொருளாதாரவியலாளர்கள் அறிவுறுத்துகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com