4வது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவு! ஐடி, வங்கித் துறை கடும் வீழ்ச்சி!

சென்செக்ஸ் 964 புள்ளிகளும் நிஃப்டி 24 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழும் சரிந்தது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

இந்திய பங்குச் சந்தை வணிகம் இன்று (டிச. 19) 4வது நாளாகத் தொடர்ந்து சரிவுடன் முடிந்தது. சென்செக்ஸ் 964 புள்ளிகளும் நிஃப்டி 24 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழும் சரிந்தது.

அந்நிய முதலீடுகளின் பற்றாக்குறையால் மெட்டல், ஐடி, வங்கித் துறை, நுகர்வோர் பொருள்கள் துறை, நிதித் துறை பங்குகள் 1% வரை சரிவைச் சந்தித்தன.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் செக்செக்ஸ் 964.16 புள்ளிகள் சரிந்து 79,218.05 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. மொத்த வணிகத்தில் இது 1.20 சதவீதம் சரிவாகும்.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 247.15 புள்ளிகள் சரிந்து 23,951.70 புள்ளிகளாக நிறைவு பெற்றது. இது மொத்த வணிகத்தில் 1.02 சதவீதம் சரிவாகும்.

சென்செக்ஸில் 3 நிறுவனங்கள் மட்டுமே உயர்வு

வணிக நேரத் தொடக்கத்தில் 79,029.03 புள்ளிகளுடன் தொடங்கிய சென்செக்ஸ் அதிகபட்சமாக 79,020.08 புள்ளிகள் வரை சரிந்தது. பின்னர் படிப்படியாக உயர்ந்து 79,516.17 புள்ளிகள் வரை உயர்ந்தது, எனினும் வணிக நேர முடிவில் 964 புள்ளிகள் சரிந்து 79,218 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது.

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள முதல் 30 தரப் பங்குகளில் 3 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே உயர்வுடன் இருந்தன. எஞ்சிய 27 நிறுவனங்களின் பங்குகள் சரிந்து காணப்பட்டன.

அதிகபட்சமாக பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனப் பங்குகள் -2.53% வரை சரிந்திருந்தது. இதற்கு அடுத்தபடியாக ஏசியன் பெயிண்ட்ஸ் -2.29%, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் -2.21%, பஜான் ஃபின்சர்வ் -2.21%, ஐசிஐசிஐ வங்கி -2.08%, ரிலையன்ஸ் -1.82%, டிசிஎஸ் -1.75% சரிந்திருந்தன.

சன்பார்மா 1.24%, பவர் கிரிட் 0.04%, ஹிந்துஸ்தான் யூனிலிவர்ஸ் 0.03% உயர்ந்திருந்தன.

நிஃப்டி நிலவரம்

வணிக நேரத் தொடக்கத்தில் 23,877.15 புள்ளிகளுடன் தொடங்கிய நிஃப்டி, அதிகபட்சமாக 24,004.90 புள்ளிகள் வரை சென்றது. பின்னர் தொடர்ந்து சரிந்து 23,870.30 புள்ளிகள் வரை சரிந்தது. வணிக நேர முடிவில் 247 புள்ளிகள் சரிந்து 23,951 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது.

நிஃப்டி பட்டியலில் உள்ள 50 தரப் பங்குகளில் திரிவேனி டர்பைன், எல்.டி.ஐ. மைண்டுட்ரீ, கிராஃப்ட்மேன் ஆட்டோ, ஜூப்லியன்ட், கம்மின்ஸ் இந்தியா, ஏபிபி இந்தியா, கிர்லோஸ்கர் ஆகிய நிறுவனப் பங்குகள் சரிந்தன.

இதேபோன்று துறை ரீதியாக மெட்டல், ஐடி, வங்கித் துறை, நுகர்வோர் பொருள்கள் துறை, நிதித் துறை பங்குகள் 1% வரை சரிவைச் சந்தித்தன.

ரூ. 10.5 லட்சம் கோடி இழப்பு

இதேபோன்று துறை ரீதியாக மெட்டல், ஐடி, வங்கித் துறை, நுகர்வோர் பொருள்கள் துறை, நிதித் துறை பங்குகள் 1% வரை சரிவைச் சந்தித்தன.

கடந்த நான்கு நாள்களாக வணிகம் சரிந்து வருகிறது. இந்த வாரத்தில் இதுவரை 3% சரிவடைந்துள்ளது. இதன்மூலம் ரூ. 10.5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக பங்கு வர்த்தக தரகு நிறுவனங்கள் குறிப்பிடுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com