முகலாயப் பேரரசரின் சந்ததியினர் ரிக்‌ஷா இழுக்கின்றனர்! யோகி ஆதித்யநாத் சர்ச்சை பேச்சு

ஔரங்கசீப்பின் வழித்தோன்றல்கள் ரிக்‌ஷா இழுப்பதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.
யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பின் வழித்தோன்றல்கள் ரிக்‌ஷா இழுப்பதாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் அயோத்தியில் நடைபெற்ற மத நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது, ``முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பின் சந்ததியினர் கொல்கத்தாவுக்கு அருகில் ரிக்ஷா இழுப்பதாக சிலர் என்னிடம் கூறினர். ஔரங்கசீப் தெய்வீகத்தை மீறி, கோயில்களையோ மத ஆலயங்களுக்கு எதிரான வேண்டத்தகாத செயல்களில் ஈடுபடாமல் இருந்திருந்தால், அவரது சந்ததியினர், இவ்வாறான சூழ்நிலைகளை எதிர்கொண்டிருக்க மாட்டார்கள்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, நமது முன்னோர்கள் `உலகம் ஒரு குடும்பம்’ என்ற கருத்தைக் கொண்டு வந்தனர். நெருக்கடியான காலங்களில் அனைத்து பிரிவினருக்கும் அடைக்கலம் கொடுத்த ஒரே மதம், சனாதன தர்மம் மட்டுமே. இருப்பினும், இந்து மதத்தினருக்கும் பதிலுக்கு அதே முறையிலான உணர்வு வழங்கப்பட்டதா?

வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானிலும் இந்துக்கள் எதிர்கொள்ளும் சவால்களே சான்றாகும். பல நூற்றாண்டுகளாக இந்து கோயில்களுக்கு எதிரான நடவடிக்கையே மீண்டும் மீண்டும் குறிவைக்கப்பட்டன. சனாதனம் பாதுகாக்கப்பட வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

17 ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த முகலாயப் பேரரசர் ஔரங்கசீப், ஒரு திறமையான பேரரசராகக் கருதப்பட்டாலும், அவரது மதக் கொள்கைகளையும், ஆட்சிக்காலத்தில் கோயில்கள் அழிக்கப்பட்டதும் அவ்வப்போது விமர்சனத்துக்கு வந்துபோகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com