எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

வன்முறைதான் தீர்வா? விடுதலை - 2 திரை விமர்சனம்!

விடுதலை - 2 திரைப்பட விமர்சனம்...

News image
Updated On :20 டிசம்பர் 2024, 6:42 pm IST

நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் உருவான விடுதலை - 2 திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

விடுதலை முதல் பாகத்தில் காவலரான சூரி, ரயில் குண்டு வெடிப்பில் மூளையாகச் செயல்பட்ட வாத்தியார் விஜய் சேதுபதியை துரத்திப் பிடித்து போலீஸ் முகாமுக்குக் கொண்டு செல்வதுடன் நிறைவடைந்திருக்கும். இரண்டாம் பாகத்தில் வாத்தியார் சொல்கிற இன்னொரு கோணமும், காவல்துறை மற்றும் அரசியல் அதிகாரங்கள் எப்படியெல்லாம் மக்கள் மீது தங்கள் அடக்குமுறையை செலுத்துகின்றன என்பதையும் சில அரசியல் நோக்கத்துக்காக வாத்தியரை அணுகுவதுமாக உருவாகியிருக்கிறது.

இடதுசாரி சிந்தனையாளாராகத் தோன்றும் கேகே (கிஷோர்), பெருமாள் வாத்தியாரை மக்களுக்கான போராட்டங்களை வழிநடத்திச் செல்பவராக மாற்றுகிறார். ஆனால், ஒருகட்டத்தில் வாத்தியார் போராட்டங்களை விடுத்து வன்முறைப் பாதையைத் தேர்ந்தெடுத்து சில கொள்கைகளை சேர்த்து ஒரு அமைப்பைத் துவங்குகிறார். இந்த அமைப்பு என்னென்ன செய்தது, இந்த வன்முறைப் போராட்டத்துக்கான காரணங்கள் என்ன என விரிகிறது விடுதலை - 2.

இயக்குநர் வெற்றி மாறன் முதல் பாகத்தில் தன் பாணி வன்முறையை, நிர்வாணக் காட்சிகளை அழுத்தமாகக் காட்சிப்படுத்தி சில விமர்சனங்களைச் சந்தித்தார். இரண்டாம் பாதியும் அதேபோல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், எந்த விதமான உணர்ச்சிகளும் கைகூடவில்லை. குண்டு வெடிக்கிறது, பெண்ணை நிர்வாணமாக சித்தரவதை செய்வது, பண்ணை அடிமைத்தனத்தைக் கொடூரமாகக் காட்டியது என எதிலும் நமக்கு எமோஷனல் கிடைக்கவில்லை. திணிக்கப்பட்ட காட்சிகளாகவே எஞ்சுகின்றன.

வாத்தியாருக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் என்ன தேவை என்பதையே மறக்க வைக்கும் அளவிற்கு அரசியல் வசனங்கள் சோதிக்கின்றன. இளமையில் தீவிரமாக வன்முறையை நம்பும் வாத்தியார் வயதாகும்போது வன்முறை தீர்வல்ல என்கிற இடத்தை நோக்கி நகர்கிறார். வாத்தியார் சிந்தனை மாற்றிய தோழர் கேகே ஆரம்பித்திலேயே வன்முறை கூடாது என்கிறார்.

அப்போது, அதை மறுக்கும் வாத்தியார் ஆயுதத்தை தூக்கி இறுதியில், ‘தத்துவம் இல்லாத தலைவர்கள் ரசிகர்களைத்தான் உருவாக்குவார்கள்’ என்கிற இடத்திற்கு செல்கிறார். விசாரணை படத்திலேயே காவல்துறையின் அமைப்பு எப்படியானது என விலாவரியாக விளக்கிய வெற்றி மாறன் விடுதலை - 2 படத்திலும் அதைக் கூறுவது, பார்த்ததையே பார்க்கும் எண்ணத்தையே தருகிறது.

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

காட்சிகளாகவே நிறைய முரண்பாடுகள் இருக்கின்றன. சூரியின் பார்வையில் விரியும் விடுதலையின் கதை இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதியின் கதையாகவே மாறியுள்ளது. சூரிக்கு அதிக காட்சிகள் இல்லை. மஞ்சு வாரியரின் வருகை, பெருமாளான விஜய் சேதுபதி வாத்தியாராக மாறுவதில் பெரிய அழுத்தங்கள் இல்லை. கொலைக்கு கொலை என்றே கதை கூறப்படுகிறது.

பண்ணையார்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது செலுத்தும் அதிகாரங்கள், அட்டூழியங்கள் நன்றாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. முக்கியமான, சகதியில் வைத்து சாட்டையால் அடிக்கும் காட்சிகள் பதற்றத்தைத் தரும் வகையில் சரியாக எடுக்கப்பட்டிருக்கிறது. அரசியல், அதிகாரம் இவற்றுக்கு இடையேயான சில வசனங்கள் யோசிக்க வைக்கின்றன.

முக்கியமாக, டாணாக்காரன் இயக்குநர் தமிழ் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். முதல் பாகத்தில் மிக நல்ல குணம்கொண்ட காவலராகக் காட்டப்பட்டவர் இரண்டாம் பாதியில் வேறு ஒருவராக மாறுகிறார். அதிகாரம், நல்ல குணங்களையே மாற்ற வல்லது என வெற்றி மாறன் அக்கதாபாத்திரத்தில் பதிவு செய்திருப்பது திரை எழுத்தாக நன்றாக இருக்கிறது.

நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், கிஷோர், ராஜிவ் மேனன், சேத்தன் ஆகியோர் தங்களுக்கான கதாபாத்திரங்களில் குறையில்லாமல் நடித்திருக்கின்றனர். இளையராஜாவின் பின்னணி இசையும், ’மனசுல ஒரு மாதிரி’ பாடலும் கதைக்கு வலு சேர்க்கிறது. கலை இயக்குநர் ஜாக்கி 1960 - 1990 காலகட்டத்தை முடிந்தவரை தத்ரூபமாகக் கொண்டு வந்திருக்கிறார். போஸ் வெங்கட் சாட்டையால் அடிக்கும் இடம் இதுவரை தமிழ் சினிமாவில் பதிவாகாத ஒன்று. பனிபொழிவான மலையும், சண்டைக்காட்சிகளிலும் ஒளிப்பதிவு சிறப்பாக இருந்தது.

ஆனால், எடிட்டிங் பகுதிகளில் வெற்றி மாறன் மீண்டும் மீண்டும் சில தவறுகளை செய்துகொண்டே இருக்கிறார். பல இடங்களில் கேமரா தடுமாறுவதும் டப்பிங்கில் திடீரென வேறு ஒருவரின் குரல் மாறுவது என வடசென்னையிலிருந்து தொடரும் சொதப்பல்கள் நிற்கவில்லை.

Story image

சில அரசியல் கருத்துகளை, கொள்கைகளை வைத்து தன்னுடைய அரசியல் நிலைப்பாடு என்ன என்பதை வெற்றி மாறன் பதிவு செய்த படமான இது எத்தனை பேருக்கு சரியாகப்புரியும் என்பது தெரியவில்லை. கிளைமேக்ஸில் இதுதான் நடக்கும் என ஊகிக்க முடிந்தாலும் ஒரு தலைவராக விஜய் சேதுபதி பேசும் சில வசனங்களும் முடிவும் அனுபவங்களால் மனிதன் செல்லும் இடம் வன்முறையா இல்லை அகிம்சையா என உணரவைத்திருக்கிறார் இயக்குநர்.

இருந்தாலும், விடுதலை திரைப்படத்தை ஒரே பாகமாக முடித்திருக்கலாம். இரண்டாவது பாகம் தேவையற்ற திணிப்பாகவே தோன்றுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.