வங்கிகளுக்கு சனிக்கிழமைதோறும் விடுமுறையா? மத்திய அரசு மறுப்புதென்மேற்கு பருவமழை 13% குறைவு, பருவநிலை மாற்றமே காரணம்! - இந்திய வானிலை ஆய்வு மையம்மாதத்தில் முதல் நாள்... பங்குச் சந்தை சரிவுடன் தொடக்கம்!ஆசிரியர் சிறப்பு தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!இடைத்தேர்தலில் ஓட்டுக்கு அதிக பணம் கொடுப்பது தவெகதான்! பெ. சண்முகம்சிவாஜி கணேசன் நூற்றாண்டு பிறந்தநாள் விழா! அரசு மீது நம்பிக்கை - பிரபுதங்கம், வெள்ளி விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (அக். 1)சென்னையில் டெங்கு பாதிப்பு 2 மடங்கு அதிகரிப்பு!சிவாஜி கணேசன் பிறந்தநாள்: தமிழக அரசு சார்பில் மரியாதை!

ஊரை மிரட்டும் டானுக்கே இந்த நிலைமையா? பத்தா - திரை விமர்சனம்!

விஜய் சேதுபதியின் பத்தா திரைப்படத்தின் விமர்சனம்...

Published On :

பத்தா - திரைவிமர்சனம்

2.5/5

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான பத்தா திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

1980-களின் சென்னையில் கதை நடக்கிறது. ஊரில் பெரிய ரௌடியான பத்தா (விஜய் சேதுபதி) உள்ளூரிலேயே சாராய வியாபாரம் செய்து அடிதடிகளில் ஈடுபடுபவர். ஊர்க்காரர்கள் அனைவருக்குமே பத்தா மேல் பயம் உண்டு. பெரியவர்கள் மட்டுமல்லாது சிறுவர்களும் பத்தா என்றால், வீட்டிற்குள்ளேயே சிங்கம் வளர்த்துவரும் மிகப்பெரிய டான்! என நம்புகின்றனர். எல்லா ரௌடிகளுக்கும் எதிரிகள் இருப்பார்கள் என்பதால் பத்தாவுக்கு ஏகப்பட்ட எதிரிகள். அப்படியான சூழலில் பத்தா எதிர்பாராத சம்பவம் ஒன்றில் சிக்கிக்கொண்டு தவிக்கும் நிலை உருவாகிறது.

யார் பத்தாவை சிக்க வைத்தது? அதற்கான காரணம் என்ன? ஊரே பத்தாவைத் தேடிக்கொண்டிருக்க அவர் எங்கு இருக்கிறார்?

படம் ஆரம்பித்து அரை மணி நேரம் கழித்து இதுவே இத்திரைப்படத்தின் சுவாரஸ்யமான கேள்விகள். ஊரையே மிரட்டி வைத்திருக்கும் பத்தாவுக்கே இந்த நிலைமையா? என முதல்பாதி முழுக்க ரகளையாகச் செல்ல, இடைவேளைக் காட்சியும் எமோஷனாக அமைகிறது. இரண்டாம்பாதியில் தன்னைச் சிக்க வைத்தது யார்? என பத்தாவான விஜய் சேதுபதியும் அவரது ஆள்களும் தேடும் காட்சிகள் சிரிப்பு, சந்தேகம், உணர்ப்பூர்வங்கள் என பல விஷயங்களையும் தொட்டுச் செல்கிறது. இயக்குநர் பாலாஜி தரணிதரன் பத்தா மூலம் ஊருக்கே ரௌடியாக இருப்பவன் ஒரு குழந்தையின் மனதில் என்னவாக இருக்கிறான்? என்கிற கேள்விகளை எழுப்பி, உண்மையில் கெத்தாவாக வாழ்வது என்றால் என்ன என்பதையும் சொல்லியிருக்கிறார்.

Listicle image

வழக்கமான ரௌடிகளின் கதையில் மோசமான வன்முறைக் காட்சிகள், தீவிரமான பழிவாங்கல் ஆகியவை அதிகம் இல்லாமல் இயல்பான வாழ்க்கையைப் பதிவு செய்துள்ளார் இயக்குநர். அதனாலேயே, இக்கதை உண்மைத்தன்மைக்கு நெருக்கமானதாக அமைந்துள்ளது. திரை எழுத்தாகவே குழந்தைகளின் உலகம் எவ்வளவு புனிதமான ஒன்று என்பதையும் அது நினைத்தால் யாரையும் அசைக்க முடியும் என்பதையும் போகிற போக்கில் சொன்ன விஷயம் நன்று. படத்தில் சபரி என்கிற கதாபாத்திரத்தில் நடித்த சிறுவன் சண்டையிடும் பொம்மைகளை வைத்திருந்தாலும் இயல்பில் அவன் மனம் கருணையை நோக்கி விரிகிறது. ரௌடியாக இருந்தாலும் கடந்த கால ஆசையொன்று பத்தாவின் மனதில் உறுத்திக்கொண்டே இருக்க, அங்கு அவன் குழந்தையாகிற தருணம் ஆகியவை மொத்த கதையிலும் தனித்துவங்களைக் கொடுக்கின்றன.

ஆனால், குறைந்த கதாபாத்திரங்கள் எதிர்பார்த்த முடிவு ஆகியவை இத்திரைப்படத்தை சிறப்பான அனுபவமாக மாற்றவில்லை. தன்னை ஒருவன் அறிந்துகொள்கிற கதையில் இன்னும் அழுத்தங்களைச் சேர்த்திருந்தால் இப்படம் முழுமையைப் பெற்றிருக்கும். இடைவேளைக்குப் பின் காட்சிகள் பெரிய மாற்றங்களைக் கொடுக்காததும் ஏமாற்றம்.

பத்தாவைக் கண்டு பயப்படவும் வேண்டும் அதே நேரம் பத்தா பேசினால் சிரிக்கவும் வேண்டும் என்பதற்காக விஜய் சேதுபதி நல்ல நடிப்பைக் கொடுத்திருக்கிறார். விஜய் சேதுபதியின் மனைவியாக நடித்த லிஜோமோல் ஜோஸும் மகளாக நடித்த சிறுமியும் கதைக்கு பலமாக அமைந்துள்ளனர். லிஜோமோல் நேர்த்தியாக உடல்மொழிகளை வெளிபடுத்தும் நல்ல நடிகையாகிவிட்டார். அதனாலே, அவர் கண்ணீர்விட்டாலே அக்காட்சிக்கு பெரிய வசனங்கள் தேவையில்லை என்கிற நிலையும் உருவாகிவிடுகிறது.

சாய் பிருத்விராஜ்

சாய் பிருத்விராஜ்

இவர்களைத் தூக்கிச் சாப்பிடும் ஆளாக குழந்தை நட்சத்திரமான சாய் பிருத்விராஜ் அசத்துகிறார். பயத்தைக் காட்டுவதாக இருக்கட்டும், தவறைச் செய்துவிட்டு அது சரியாகுமா எனப் பதற்றப்படுவதாக இருக்கட்டும் அழுத்தமான நடிப்பைக் கொடுத்துள்ளார். ஒரு மரத்தடியில் விஜய் சேதுபதியும் அச்சிறுவனும் பேசிக்கொள்ளும் காட்சி அசைத்துப் பார்க்கிறது.

இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இப்படத்திற்கு திரும்பத் திரும்பக் கேட்கும் பாடல்களைக் கொடுத்திருக்கிறார். ஊரோட ஒத்த டான், மகளே பாடல்கள் திரையில் பார்க்கவும் சிறப்பாக இருக்கிறது. நகைச்சுவைக் காட்சிகளுக்கான பின்னணி இசை, விஜய் சேதுபதி எமோஷனலுக்குப் பயன்படுத்தப்பட்ட இசைகள் ஆகியவை கதைக்கு உறுதுணையாக இருக்கின்றன.

கலை இயக்குநர் கண்ணன்.எஸ் மற்றும் ஒளிப்பதிவாளர் செல்வகுமார் எஸ்.கே ஆகியோர் 1980-களின் சென்னையைக் கொண்டு வந்திருக்கின்றனர். சில காட்சிகள் துறுத்தினாலும் ஸ்ருதி மஞ்சரியின் ஆடை வடிவமைப்பில் அப்படியே 40 ஆண்டுகளுக்கு முன் சென்னை இப்படியும் இருந்திருக்கலாம் என்கிற எண்ணத்தைத் தருகிறது. தொழில்நுட்பக் குழுவினரும் சிறப்பான பங்களிப்பைச் செய்துள்ளனர்.

பத்தா என்றால் என்ன என்பதற்கும் ஒரு வசனத்தில் சொல்லப்படுகிறது. ஆனால், உண்மையான அடையாளம் என்பது நாம் யார் என்பதை நாமே உணர வேண்டும் இல்லையா? பத்தா அந்தக் கதையைச் சுவாரஸ்யமாகவும் எமோஷனலாகவும் சொல்கிறது!

The movie baththa, starring actor Vijay Sethupathi, has been released in theaters today.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER