ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் பல்பீர் சிங், சுக்பீர் தலால் ஆகிய இருவரும் பாஜகவில் இணைந்தனர்.
பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா, கட்சியின் தில்லி பொதுச் செயலர் ஆஷிஷ் சூத், மத்திய அமைச்சர் ஹர்ஷ் மல்ஹோத்ரா ஆகியோர் முன்னிலையில் சனிக்கிழமை பாஜக கட்சியில் இணைந்தனர்.
இதுதொடர்பாக பல்பீர் சிங் கூறுகையில்,
தில்லி சீக்கிய குருத்வாரா நிர்வாகக் குழுவில் 6 முறை உறுப்பினராக உள்ள ஆம் ஆத்மி தலைவர் சிங், தில்லி அரசு வேண்டுமென்றே பஞ்சாபி மொழி ஆசிரியர்களை நியமிக்காதது குறித்து கோபமடைந்ததாகக் கூறினார்.
தேர்தலைப் பொறுத்தவரையில், இவ்வளவு காலம் என்னுடன் இருந்தவர்கள் என் பக்கபலமாக இருந்தவர்கள் அனைவருக்கும் நன்றி. தில்லி துணைநிலை ஆளுநர் சக்சேனா பஞ்சாபி ஆசிரியர்களை பணியமர்த்த உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆனால் அரசுப் பளளிகளில் வேண்டுமென்றே ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதில்லை. இது பல சீக்கிய மாணவர்களையும் பாதித்துள்ளது என்று அவர் கூறினார்.
இதுதொடர்பாக சுக்பீர் தலால் கூறுகையில்,
தனது முன்னாள் தலைவர்கள் பணிகளை சரியாக செய்யவில்லை என்று விமர்சித்தார். விளையாட்டு பல்கலைக்கழகத்தை உருவாக்க விரும்பினேன். மிகவும் சிரமப்பட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் ஐந்து ஆண்டுகளாகியும், அங்கு ஒரு சாலைகூட அமைக்கப்படவில்லை. ஆனால் அதற்கான பட்ஜெட் ஒதுக்கப்பட்டதாக கேஜரிவால் மக்களிடம் பொய் கூறினார்.
கேஜரிவால் இப்படி எல்லோரிடமும் பொய் சொல்ல முடியும் என்றால்.. நான் இந்த கட்சியில் இருக்கக்கூடாது என்று முடிவு செய்தேன் என்று அவர் கூறினார்.
தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 2025 இல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,. ஆம் ஆத்மி கட்சி தங்களது முழு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது, இதில் முக்கிய தலைவர்களான அரவிந்த் கேஜரிவால், அதிஷி ஆகியோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். பாஜக விரைவில் தங்கள் பட்டியலை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தில்லியின் முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் புதுதில்லியிலும், முதல்வர் அதிஷி கல்காஜியிலும், அமைச்சர் சௌரப் பரத்வாஜ் கிரேட்டர் கைலாஷிலும், அமைச்சர் கோபால் ராய் பாபர்பூரிலும் போட்டியிடுகின்றனர்.
சத்யேந்திர குமார் ஜெயின் ஷகுர் பஸ்தியிலும், துர்கேஷ் பதக் ராஜிந்தர் நகரிலும், ரகுவிந்தர் ஷோக்கீன் நங்லோய் ஜாட் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பேரவையில் இருந்து 6 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் வெளியேற்றம்

தில்லி சட்டப்பேரவையில் மழைக்கால அமா்வு: பாஜக-ஆம் ஆத்மி இடையே கடும் வாக்குவாதம்

சிஜேபி போராட்டக்காரா்களுக்கு ’வலதுசாரி குண்டா்களிடமிருந்து’ பாதுகாப்பு: ஆம் ஆத்மி அறிவிப்பு

16 ஐவிபி கவுன்சிலா்கள் பாஜகவில் ஐக்கியம்: எம்சிடியில் ஆம் ஆத்மிக்கு பின்னடைவு
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI



