
வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சாா்பில் அந்தக் கட்சியின் பொதுச்செயலா் பிரியங்கா காந்தியும் பாஜக சாா்பில் நவ்யா ஹரிதாஸும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் சத்யன் மொகேரி மாநிலத்தின் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி வேட்பாளராகவும் களமிறங்கினா்.
இதில் பிரியங்கா காந்தி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த நிலையில், பிரியங்கா காந்தி வெற்றி பெற்றதை எதிர்த்து நவ்யா ஹரிதாஸ் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில் தேர்தல் வேட்புமனுவில் பிரியங்கா காந்தி தனது சொத்து விவரஙக்ளை சரிவர பதிவு செய்யாமல் முறைகேடு செய்திருப்பதாக பாஜக சார்பில் போட்டியிட்ட நவ்யா ஹரிதாஸ் குறிப்பிட்டுள்ளார். இது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரியில் இந்த வழக்கு விசாரணை நடைபெறும் எனத் தெரிகிறது.
இது குறித்து காங்கிரஸ் தரப்பில் மாநிலங்களவை உறுப்பினர் பிரமோத் திவாரி பேசியதாவது, வெறும் விளம்பரத்துக்காகவே இத்தகைய நடவடிக்கையில் பாஜக வேட்பாளர் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த மனு கேரள உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்படுவதுடன், நவ்யா ஹரிதாஸுக்கு அபராதமும் விதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
பிரியங்கா காந்தி வயநாடு இடைத்தேர்தல் வேட்புமனுவில் தனக்கு ரூ. 12 கோடிக்கும் மேல் சொத்து மதிப்பிருப்பதாக குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.