தவறான விளம்பரம்: ஐஏஎஸ் பயிற்சி நிறுவனத்துக்கு ரூ.2 லட்சம் அபராதம்

2023 குடிமைப் பணித் தேர்வு முடிவுகள் தொடர்பாக தவறான தகவல்களை விளம்பரம் செய்ததற்காக தனியார் போட்டித் தேர்வு பயிற்சி நிறுவனத்துக்கு ரூ.2 லட்சம் அபராதம்
தவறான விளம்பரம்: ஐஏஎஸ் பயிற்சி நிறுவனத்துக்கு ரூ.2 லட்சம் அபராதம்
Published on
Updated on
1 min read

புதுதில்லி: குடிமைப் பணித் தேர்வு எழுதும் மாணவர்களை திசை திருப்பும் வகையில், 2023 குடிமைப் பணித் தேர்வு முடிவுகள் தொடர்பாக தவறான தகவல்களை விளம்பரம் செய்ததற்காக தனியார் போட்டித் தேர்வு பயிற்சி நிறுவனமான சுப்ரா ரஞ்சன் ஐஏஎஸ் பயிற்சி நிறுவனத்துக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்துள்ள மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம்(சிசிபிஏ), உடனடியாக தவறான விளம்பரங்களை நீக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

2023 குடிமைப் பணித் தேர்வில் எங்கள் நிறுவனத்தில் படித்தவர்களில் முதல் 100 இடங்களில் 13 மாணவர்களும், முதல் 200 இடங்களில் 28 மாணவர்களும், முதல் 300 இடங்களில் 39 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், வெற்றி பெற்றவர்களின் புகைப்படங்கள் மற்றும் பெயர்கள் விளம்பரம் செய்ததுடன், அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அவர்களால் வழங்கப்படும் பல்வேறு வகையான படிப்புகள் குறித்தும் ஒரே நேரத்தில் விளம்பரப்படுத்தியுள்ளது. இருப்பினும், 2023 குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்த பாடப்பிரிவுகள் தொடர்பான தகவல்கள் மேற்கூறிய விளம்பரத்தில் இடம்பெறவில்லை.

இந்த நிலையில், மேற்கண்ட பயிற்சி நிறுவனத்தின் விளம்பரங்கள் குடிமைப் பணித் தேர்வு எழுதும் மாணவர்களை திசை திருப்பும் வகையில் அமைந்துள்ளதாக புகார்கள் எழுந்தது.

இதையடுத்து விசாரணை மேற்கொண்ட மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம்(சிசிபிஏ), பயிற்சி நிறுவனம் தவறான தகவல்களை வெளியிட்டுள்ளதை உறுதி செய்ததுடன் ​​இந்த நிறுவனம் 50-க்கும் மேற்பட்ட படிப்புகளை வழங்குகிறது மற்றும் வெற்றி பெற்ற மாணவர்களில் பெரும்பாலானோர் அரசியல் அறிவியல் மற்றும் சர்வதேச உறவுகள் தொடர்பான பாடத்தையே எடுத்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது.

வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் பயிற்சி நிறுவனத்தில் எடுத்து படித்த குறிப்பிட்ட பாடத்திட்டத்தைப் பற்றி தெரிவிக்க வேண்டியது நுகர்வோரின் உரிமையாகும்.

இதற்கிடையில், அந்த நிறுவனம் பெயர் மற்றும் முகவரி அச்சிடப்பட்ட குறிப்பேட்டில் ஐஏஎஸ் என பயன்படுத்தியது, மேலும் அந்த நிறுவனத்தை வைத்திருப்பவர் ஒரு ஐஏஎஸ் அதிகாரி என விளம்பரங்களில் தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

இதையடுத்து இது நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை மீறும் செயல் எனக் குறிப்பிட்டு, பயிற்சி நிறுவனத்தின் மீது நடவடிக்கை மேற்கொண்டு உள்ள மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம், தவறான தகவல்களை விளம்பரம் செய்ததற்காக ரூ.2 லட்சம் அபராதம் செலுத்துமாறும், தவறான விளம்பரங்களை உடனடியாக நீக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com