ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

குற்றவியல் வழக்கு விசாரணை நடைமுறைகளில் தொழில்நுட்ப பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்: காவல் துறைக்கு அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தல்

குற்றவியல் வழக்குகளிலும், விசாரணை நடைமுறைகளிலும் தொழில்நுட்ப பயன்பாட்டை இயன்றளவு அதிகரிக்க வேண்டும் என்று காவல் துறையினருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News image
Updated On :24 டிசம்பர் 2024, 10:32 pm

DIN

நமது சிறப்பு நிருபர்

குற்றவியல் வழக்குகளிலும், விசாரணை நடைமுறைகளிலும் தொழில்நுட்ப பயன்பாட்டை இயன்றளவு அதிகரிக்க வேண்டும் என்று காவல் துறையினருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை உத்தரகண்ட மாநிலத்தில் அமல்படுத்துவது குறித்த ஆய்வு கூட்டம் தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் தேசிய குற்ற ஆவணக் காப்பக (என்சிஆர்பி) அதிகாரிகள் பங்கேற்றனர்.

அகில இந்திய அளவில் குற்றங்கள், குற்றவியல் கண்காணிப்பு கட்டமைப்பு செயல்முறை, தேசிய தானியங்கி கைரேகை அடையாள அமைப்பு, குற்றவியல் நீதி அமைப்புகளுக்கிடையேயான அமைப்பு, தடயவியல், அரசு வழக்காடு துறை, நீதி, சிறைத்துறை உள்ளடக்கிய அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுத்துவது குறித்து கூட்டத்தில் மதிப்பாய்வு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசகங்களில் புதிய சட்டங்கள் தொடர்பான இ}சாக்ஷ்ய, நியாய ஸ்ருதி, இ}சைன்,

இ}சம்மன்கள் உள்ளிட்ட செயலிகளைப் பயன்படுத்த வேண்டும். மேலும், தொழில்நுட்ப பயன்பாட்டை அதிகரிக்க வேண்டியது அவசியம். அனைத்து குற்றவியல் வழக்குகளிலும் விசாரணை நடைமுறையை விரைவுபடுத்த வேண்டும். மூன்று புதிய குற்றவியல் சட்டங்களையும் முழுமையாக செயல்படுத்த குற்றவியல் நீதி அமைப்புகள், செயல்பாட்டு அமைப்புடன் இணைக்கப்படுவதை என்சிஆர்பி உறுதி செய்யவேண்டும்.

குற்றவியல் கண்காணிப்பு கட்டமைப்பு செயல்முறையின் முன்னேற்றத்தை வழக்கமான அடிப்படையில் கண்காணித்து, மூத்த காவல் துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடத்த வேண்டும். குற்றங்கள், முன்தடுப்பு உள்ளிட்ட பல்வேறு சூழல்களில் பயோமெட்ரிக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதும் அவசியம் என்றார் அமைச்சர் அமித் ஷா.

இக்கூட்டத்தில் மத்திய உள்துறை செயலகம், தேசிய குற்ற ஆவணக் காப்பக இயக்குநரகம், தேசிய புலனாய்வு முகமை, என்.சி.ஆர்.பி. ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.