இந்தியா கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலக்கப்படும்: ஆம் ஆத்மி

தில்லி தேர்தலில் பாஜகவுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்திருப்பதாகவும் குற்றச்சாட்டு
ராகுல் காந்தி
ராகுல் காந்திகோப்புப் படம்
Published on
Updated on
1 min read

தில்லியில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜரிவாலை தேசவிரோதி என்று அழைத்ததுடன், அவர்களுக்கு எதிரான வெள்ளை அறிக்கையை வெளியிட்ட காங்கிரஸ் தலைவர் அஜய் மாக்கன் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், இந்தியா கூட்டணியிலிருந்து காங்கிரஸை நீக்க, கூட்டணி கட்சிகளிடம் கோரிக்கை விடுக்கப்படும் என்று ஆம் ஆத்மி கூறியுள்ளது.

இதுகுறித்து ஆம் ஆத்மி எம்.பி. கூறியதாவது, ``அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு சாதகமாக அமைவதற்காக காங்கிரஸ் பலவிதமான செயல்களை மேற்கொண்டு வருகிறது. பாஜக எழுதிக் கொடுப்பதைத்தான், அஜய் மாக்கன் அறிக்கைகளாக வெளியிடுகிறார். பாஜகவின் அறிவுறுத்தலின் அடிப்படையில்தான், ஆம் ஆத்மியையும் காங்கிரஸ் குறி வைக்கின்றனர்.

மேலும், அவர்கள் அரவிந்த் கேஜரிவாலை தேசவிரோதி என்று குறிப்பிடுகின்றனர். மக்களவைத் தேர்தலின்போது, தில்லியிலும், சண்டிகரிலும் காங்கிரஸுக்காக கேஜரிவால் பிரசாரம் செய்தார். நாடாளுமன்றப் பிரச்னைகளிலும் காங்கிரஸுடன் ஆம் ஆத்மி துணை நிற்கிறது. ஆனால், நீங்கள் கேஜரிவாலை தேசவிரோதி என்று அழைப்பதுடன், அவர் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்கின்றனர்.

அதிகபட்ச வரம்புகளையும் மீறிய அஜய் மாக்கன் மீது காங்கிரஸ் 24 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், இந்தியா கூட்டணியில் இருந்து காங்கிரஸை நீக்குமாறு, கூட்டணி கட்சிகளிடம் கோருவோம்’’ என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, தில்லி முதல்வர் அதிஷி பேசியதாவது, காங்கிரஸின் நடவடிக்கைகளும் வார்த்தைகளும், தில்லி தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பதாகத் தெரிகிறது. இதுவரையில் பாஜக மீது காங்கிரஸ் காவல்துறையில் புகார் அளித்ததில்லை. ஆனால், ஆம் ஆத்மிக்கு எதிராக அவ்வாறு செய்கின்றனர்’’ என்று தெரிவித்தார்.

தில்லியில் மாசு, குடிமை வசதிகள், சட்டம் ஒழுங்கு மீதான தவறான நிர்வாகம் முதலானவற்றை குறிப்பிட்டு, புதன்கிழமை (டிச. 25) ஆம் ஆத்மி, பாஜகவை எதிர்த்து, தில்லி காங்கிரஸ் 12 பக்க வெள்ளை அறிக்கையை வெளியிட்டது.

மேலும், தில்லி காங்கிரஸ் தலைவர் அஜய் மாக்கன் கூறியதாவது, ஊழல் எதிர்ப்பை முன்வைத்துதான், தில்லியில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தது. இப்போது அவர்கள் அதை மறந்துவிட்டார்கள். தில்லியை லண்டனைப் போல் ஆக்குவோம் என்றும் கூறினர். தற்போது தேசிய தலைநகரை மாசுபடுத்துவதில் முதலிடமாக உருவாக்கியுள்ளனர். ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்தது ஒரு தவறு. அதை சரிசெய்ய வேண்டும், மேலும் அது எனது தனிப்பட்ட கருத்து’’ என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com