
உத்தரப் பிரதேசத்தில் சமூக வலைதளத்தில் ஆயுதம் ஏந்திய புகைப்படத்தைப் பகிர்ந்த காலிஸ்தான் ஆதரவு சீக்கியர் கைது செய்யப்பட்டார்.
உத்தரப் பிரதேசத்தில் வசித்து வந்த ஹரியானாவைச் சேர்ந்த சீக்கியரான குர்சேவக் சிங் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஆயுதங்களுடன் இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு அதில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்களை இணைத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்த கோட்வாலி பகுதி காவல்துறையினர் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவருக்கு காலிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளுடன் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கடந்த டிசம்பர் 23 அன்று உ.பி.யின் புரன்பூர் பகுதியில் பஞ்சாப் மற்றும் உ.பி. காவல்துறையினர் சேர்ந்து நடத்திய என்கவுன்டரில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதன் பின்னர், காலிஸ்தான் ஆதரவாளர்கள் குறித்து தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்ட நிலையில் குர்சேவக் சிங் இவ்வாறு பதிவிட்டது அவரது கைதுக்கு வழிவகுத்தது.
சமூக வலைதளங்களில் பரவும் இதுபோன்ற பதிவுகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், பிரிவினைவாத செயல்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
மேலும், இது தொடர்பாக சந்தேகத்திற்குரிய சம்பவங்கள் ஏதேனும் நடந்தால் உடனடியாக காவல்துறைக்கு புகார் அளிக்குமாறு உள்ளூர்வாசிகளை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.