மேடையில் இருந்து விழுந்த காங். பெண் எம்எல்ஏ: வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை!

கேரள காங்கிரஸ் பெண் எம்எல்ஏ மேடையிலிருந்து விழுந்து விபத்து..
உமா தாமஸை மீட்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்.
உமா தாமஸை மீட்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்.PTI
Published on
Updated on
1 min read

கேரளத்தில் நடைபெற்ற நடன நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மேடைக்கு வந்த காங்கிரஸ் எம்எல்ஏ உமா தாமஸ் கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார்.

அவருக்கு தொடர்ந்து வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொச்சியில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் பரதநாட்டியம் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் விஐபிக்கள் அமர்வதற்காக 15 அடி உயர மேடை போடப்பட்டிருந்தது. நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாக காங்கிரஸ் எம்எல்ஏ உமா தாமஸ் மேடைக்கு வந்துள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக மேடையில் இருந்து கீழே விழுந்த அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

கேரள கலாச்சாரத்துறை அமைச்சர் சாஜி செரியன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கிவைப்பதற்கு முன்னதாக இந்த விபத்து நடந்துள்ளது.

வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை

விபத்தில் சிக்கிய எம்எல்ஏ உமா தாமஸ் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு எடுக்கப்பட்ட சிடி ஸ்கேனில் தலையில் எலும்பு முறிவு, ரத்த கசிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. கோட்டயம் மற்றும் எர்ணகுளம் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து சிறப்பு மருத்துவர்கள் எம்எல்ஏவுக்கு சிகிச்சை அளிக்கும் குழுவுடன் இணைந்துள்ளனர்.

சுயநினைவை இழந்துள்ள உமா தாமஸுக்கு தொடர்ந்து வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவர்களுடன் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், தொழில்துறை அமைச்சர் ராஜீவ் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

இந்த நிலையில், மேடையில் நிற்பதற்கு போதுமான இடம் ஒதுக்காததே உமா தாமஸ் கீழே விழுவதற்கு காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையடுத்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது வழிகாட்டு நெறிமுறைகள் மீறப்பட்டதாக கொச்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com