
மும்பையில் நோயாளி ஒருவருக்கு துப்புரவுப் பணியாளர் இசிஜி சோதனை நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையின் கோவந்தி பகுதியிலுள்ள சதாப்தி மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்கு துப்புரவுப் பணியாளர் இதய சிகிச்சைக்கு செய்யப்படும் இசிஜி சோதனை மேற்கொள்ளும் காட்சி சமூக வலைதளங்களில் பரவியது. முறையான பயிற்சி எதுவுமில்லாத நிலையில் மருத்துவரின் ஆலோசனைப்படி அவர் தொடர்ந்து இந்த சோதனையை செய்து வந்தது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பான விடியோ வைரலானதைத் தொடர்ந்து வழக்கறிஞர் அபித் அப்பாஸ் சையது என்பவர் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாநில சுகாதார அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இந்த சம்பவத்தில் மருத்துவ நெறிமுறைகளை மீறப்பட்டதாகவும் மருத்துவமனை ஊழியர்கள் பொறுப்பின்றி நடந்துகொண்டதாகவும் வழக்கறிஞர் அப்பாஸ் தெரிவித்தார்.
மேலும், ஒரு பெண் நோயாளிக்கு சீருடை அணிந்த ஆண் துப்புரவுப் பணியாளர் ஒருவர், தகுதியான மருத்துவப் பணியாளர்கள் மட்டுமே செய்யப்பட வேண்டிய சோதனையை அனுமதியின்றி செய்ததாகக் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
இந்த நிலையில், சோதனை நடத்திய நபர் பயிற்சி பெற்றவர் என்று மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அந்த மருத்துவமனையில் 35% சதவீத பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், மருத்துவத் துறை இதை கவனத்தில் கொண்டு பணியாளர்களை நியமிக்கவேண்டும் என்று அங்குள்ள மூத்த மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.