ராகுல் காந்தி நடைப்பயணம்: காங்கிரஸுக்கு ஆகும் செலவு இவ்வளவா?

ஜோடா யாத்திரைக்காக காங்கிரஸ் கட்சி செலவு செய்த விபரங்களைத் தனது நிதியறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஜார்க்கண்டில் ராகுல் காந்தி | PTI
ஜார்க்கண்டில் ராகுல் காந்தி | PTI

ராகுல் காந்தியின் பாரத் ஜோடா பாத யாத்திரையின் முதல் கட்டம் செப்.7, 2022 கன்னியாகுமரியில் தொடங்கி ஜன.30, 203-ல் ஜம்மு காஷ்மீரில் நிறைவு பெற்றது. இந்த பயணத்திற்கு காங்கிரஸ் நாளொன்றுக்கு ரூ.50 லட்சம் செலவு செய்துள்ளது.

நடைபயணத்தின் தூர அளவில் பார்த்தால் சராசரியாக ரூ.1.59 லட்சம் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு செலவாகியுள்ளதைக் கட்சியின் வரவு செலவு அறிக்கை மூலம் கணக்கிட முடிகிறது.

இந்திய தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி 2022-2023 நிதியாண்டுக்கான தணிக்கை அறிக்கையைச் சமர்பித்தது. அதன்படி கட்சியின் வருவாய் ரூ.452 கோடி எனவும் தேர்தலுக்கான செலவு ரூ.192 கோடி சேர்த்து மொத்த செலவினங்கள் ரூ.467 கோடி எனவும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

நிர்வாகம் மற்றும் பொது செலவினங்கள்கீழ் காங்கிரஸ் கட்சி பாரத் ஜோடா யாத்திரைக்காக ரூ.71.83 கோடி செலவு செய்துள்ளது. 145 நாள்களுக்கு நீடித்த இந்த பாத யாத்திரை 4,500 கிமீ தூரத்தை உள்ளடக்கியது.

அரசியல் கட்சிகள் ஆண்டுதோறும் தங்கள் நிதி அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் சமர்பிப்பது வழக்கம். அதன்படி காங்கிரஸ் கட்சி சார்பில் சமர்பிக்கப்பட்ட அறிக்கையில் கடந்த ஆண்டை விட இந்தாண்டு நிர்வாக செலவுகள் 2.6 மடங்கு அதிகரித்துள்ளது.

செலவுகள் கூடியுள்ள போதும், வருவாய் ரூ.541 கோடியில் இருந்து ரூ.452 கோடியாக குறைந்தே உள்ளது.

நன்கொடைகள், மானியங்கள், பங்களிப்புகள் படிப்படியாக குறைந்துள்ளதையும் பார்க்க முடிகிறது. 2021-22 -ல்  ரூ.347 கோடியாக இருந்த வருவாய் 22-23 ஆம் ஆண்டில் ரூ.268 கோடியாக குறைந்துள்ளது.

தற்போது ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் ஜோடா யாத்திரையின் இரண்டாவது கட்டம் மணிப்பூர் முதல் மும்பை வரையிலான தூரத்தை உள்ளடக்கியது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com