கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

4 வயது மகன், 2 வயது மகளுடன் தாய் தற்கொலை

குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்ததுக்கான காரணம் குறித்து காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.

News image
Updated On :3 பிப்ரவரி 2024, 7:03 am

சத்தீஸ்கர் மாநிலம் பலோட் மாவட்டத்தில் 28 வயதான தாய் மற்றும் இரு குழந்தைகள் தூக்கிட்டு இறந்த சம்பவம் நிகழ்ந்ததாக காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

தாய் இறப்பதற்கு முன்பு இரு குழந்தைகளையும் தூக்கிலிட்டு இருக்க வேண்டும் என காவலர்கள் சந்தேகிக்கின்றனர்.

பலோட் மாவட்டத்தில் வசித்து வருபவர் ஹேம்லதா சாஹு. இவரது கணவர் கட்டடத் தொழிலாளி. 4 வயது  மகன் மற்றும் 2 வயது மகள் தம்பதிக்கு உள்ளனர். வெள்ளிக்கிழமை கணவர் பணிக்காக வெளியே சென்றுள்ளார்.

உடல்நிலை சரியில்லாத மாமியாரை மருத்துவமனையில் வைத்து கவனித்துக் கொள்ளும் மாமனார் வீட்டுக்கு திரும்பியபோது வீடு உள்பக்கமாக தாழிடப்பட்டதைக் கவனித்துள்ளார்.

ஜன்னல் வழியாக பார்த்தபோது மருமகளும் குழந்தைகளும் வீட்டின் மேற்கூரையில் தூக்கிட்ட நிலையில் இருப்பதைக் கண்டு அருகில் உள்ளவர்களின் உதவியுடன் வீட்டுக்குள் நுழைந்தனர்.

தற்கொலைக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருவதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050]. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.