சிவசேனை தலைவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய பாஜக எம்எல்ஏ மீது பட்டியலினப் பெண் புகார்

சிவசேனை தலைவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பாஜக எம்எல்ஏ சாதி ரீதியாக துன்புறுத்தலுக்குள்ளாக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 
சிவசேனை தலைவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய பாஜக எம்எல்ஏ மீது பட்டியலினப் பெண் புகார்

மும்பை : மகாராஷ்டிரத்தில் காவல் நிலையத்தில் சிவசேனை கட்சி (ஷிண்டே பிரிவு) தலைவா் மீது பாஜக எம்எல்ஏ துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம்  பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தாணே மாவட்டத்தில் உள்ள கல்யாண் தொகுதி பாஜக எம்எல்ஏ கண்பத் கெய்க்வாட். இவருக்குச் சொந்தமான நிலத்தை சிவசேனை கட்சியின் கல்யாண் பகுதி தலைவா் மகேஷ் கெய்க்வாட் ஆக்கிரமித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நிலப் பிரச்னை தொடா்பாக கடந்த வெள்ளியன்று(பிப்.2)  தாணே மாவட்டத்தில் உல்ஹாஸ்நகரில் உள்ள ஹில் லைன் காவல் நிலையத்திற்குள் நடந்த வாக்குவாதத்தின்போது, ஆத்திரமடைந்த  எம்எல்ஏ கண்பத் கெய்க்வாட், சிவசேனை கட்சியை சேர்ந்த மஹேஷ் கெய்க்வாட் மற்றும் அவரது உதவியாளர் ராகுல் பாட்டில் ஆகிய இருவரையும்  துப்பாக்கியால் சுட்டுள்ளார். பலத்த காயமடைந்த மகேஷ் கெய்க்வாட் அருகில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா், உயா்சிகிச்சைக்காக தாணேவில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அவா் கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. 

இதனையடுத்து அவர் மீது, கொலை முயற்சியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு வழக்குப் பதியப்பட்டுள்ளது. தாணே மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தில் பாஜக எம்எல்ஏ சனிக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா். அவரை பிப்.14-ஆம் தேதி வரை போலீஸ் காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே, கைது செய்யப்படுவதற்கு முன்னதாக செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் எம்எல்ஏ கண்பத் கெய்க்வாட், ‘காவல் நிலையத்தில் அதிகாரிகள் முன்னிலையில் என்னுடைய மகனைத் தாக்கினா். அப்போது நான் என்ன செய்ய முடியும்? அதனால், 5 முறை துப்பாக்கியால் சுட்டேன். முதல்வா் ஏக்நாத் ஷிண்டே மாநிலத்தில் குற்றவாளிகளின் ஆட்சியை ஏற்படுத்த முயற்சித்து வருகிறாா்’ என்றாா்.

இதனிடையே   எம்எல்ஏ கண்பத் கெய்க்வாட் மீது மகாராஷ்டிராவின் த்வார்லி கிராமப் பகுதியைச் சேர்ந்த பட்டியலின பிரிவைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த மாதம் புகாரளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதில், தன்னை சாதி ரீதியாக துன்புறுத்தலுக்குள்ளாகியதாக எம்எல்ஏ  கணபத் கைக்வாட் மீது குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து, இந்த இரு புகார்களின் அடிப்படையில் காவல்துறையினர்  எம்எல்ஏ  கணபத் கெய்க்வாடிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com