அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த காங்கிரஸ்

இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கும் காங்கிரஸுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டு வருகிறது. 
அகிலேஷ் யாதவ்
அகிலேஷ் யாதவ்

சமஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவின் கேள்விக்குப் பதிலளித்துள்ளது காங்கிரஸ்.

காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடா பாத யாத்திரைக்கான அழைப்பு தனக்கு கிடைக்கவில்லை என இந்தியா கூட்டணி உறுப்பினரான சமஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

அதற்கு பதிலளித்துள்ள காங்கிரஸ், இன்னும் ஒரு நாள் அல்லது இரண்டு நாள்களில் பயணத்திட்டம் உறுதி செய்யப்பட்டவுடன் இந்தியா கூட்டணி கட்சிகளுடன் பகிர்ந்துகொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளது.

“மிகப்பெரிய நிகழ்வுகள் நிறைய நடக்கின்றன. பிரச்னை என்னவென்றால் எங்களுக்கு அழைப்பு இருப்பதில்லை” என அகிலேஷ் யாதவ் சனிக்கிழமை தெரிவித்திருந்தார்.

காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ், “விரிவான பயணத்திட்ட விவரங்கள் மற்றும் நிகழ்வுகள் இறுதி செய்யப்பட்டவுடன் கூட்டணி கட்சிகளுக்கு தெரிவிக்கப்படும். அவர்களின் பங்கேற்பு கூட்டணியை வலுவாக்கும். பிப்.16 பிற்பகலில் பாத யாத்திரை உத்தர பிரதேசத்தில் நுழையும் என எதிர்பார்க்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கும் காங்கிரஸுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

15 மாநிலங்கள், 110 மாவட்டங்கள், 6,713 கிமீ தொலைவைக் கடந்து பாரத ஜோடா யாத்திரை மார்ச் 20 அல்லது 21-ம் தேதிகளில் மும்பையில் முடிவடையவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com