2024ல் இந்தியாவில் களமிறங்கும் மின்சார வாகனங்கள்!

பசுமை இயக்கத்தை நோக்கிய குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தில், இந்தியாவில் மின்சார வாகன விற்பனை 2023ல் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்தது.
2024ல் இந்தியாவில் களமிறங்கும் மின்சார வாகனங்கள்!

பசுமை இயக்கத்தை நோக்கிய குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தில், இந்தியாவில் மின்சார வாகன விற்பனை 2023ல் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. பல்வேறு பிரிவுகளில் ஒட்டுமொத்த மின்சார வாகன விற்பனை இந்த ஆண்டில் 15 லட்சம் யூனிட்களைத் தாண்டியது. இது முந்தைய ஆண்டின் மொத்த விற்பனையுடன் ஒப்பிடும்போது 48 சதவிகித வளர்ச்சி. 

இந்த வளர்ச்சி தொடர்ந்து வளர்ந்து வருவதால், உற்பத்தியாளர்கள் பல்வேறு வகைகளின் தேவையை பூர்த்தி செய்ய புதிய மாடல்களை தீவிரமாக அறிமுகப்படுத்தி வருகின்றனர்.

2023ல் நுழைவு நிலை மாடல்கள் முதல் உயர்தர சொகுசு வாகனங்கள் வரை பல மின்சார கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதனை தொடர்ந்து, உற்பத்தியாளர்கள் வரும் மாதங்களில் மேலும் பல புதிய மாடல்களை அறிமுகப்படுத்த தயாராகி வருகின்றனர். குறிப்பாக நாட்டில் அதிகம் விற்பனையாகும் மின்சார பி.வி. வரிசைகளில் ஒன்றான டாடா மோட்டார்ஸ் ஏற்கனவே தனது ஆட்டத்தை தொடங்கிவிட்டது 

மாருதி சுஸுகி - இ.வி.எக்ஸ்.

மாருதி சுஸுகி நிறுவனம் இந்தியாவில் தனது முதல் எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. இவிஎக்ஸ் என்று பெயரிடப்பட்ட இந்த எஸ்யூவி முதலில் ஆட்டோ எக்ஸ்போ 2023ல் ஒரு கான்செப்ட்டாக காராக காட்சிப்படுத்தப்பட்டது. மாருதி சுஸுகியில் இருந்து சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ள முதல் எலக்ட்ரிக் காராக இவிஎக்ஸ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், மாருதி சுஸுகி இவிஎக்ஸ் கார் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக சாலையில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. 

இ.வி.எக்ஸ். மாடலில் இரண்டு பேட்டரி பேக் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடிப்படை மாடல்களில் 48 kWh திறன் கொண்ட பேட்டரி பேக்கும், டாப்-எண்ட் வகைகளுக்கு 60 kWh திறன் கொண்ட பேட்டரி பேக்கும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த எலக்ட்ரிக் காரின் ரேஞ்ஜ் 550 கிமீ ஆக எதிர்பார்க்கப்படுகிறது. 

மஹிந்திரா எக்ஸ்யூவி.e8

2022ல் மஹிந்திரா விரைவில் வரவிருக்கும் மின்சார எஸ்யூவி.e8 கான்செப்ட் காரை காட்சிப்படுத்தப்படுத்தியது. அன்றிலிருந்து இன்று வரை இந்திய சாலைகளில் பல முறை இந்த காரானது சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

எக்ஸ்யூவி.e8 கார் 60-80 kWh கொண்ட பேட்டரி பேக்கைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 335 bhp மற்றும் 389 bhp இடையே இழுவை திறன் ஜெனரேட் செய்யக்கூடிய டூயல் எலக்ட்ரிக் மோட்டார் அமைப்பையும் கொண்டிருக்கும். ஆல் வீல் டிரைவ் வசதியுடன் வரும் என்பதையும் மஹிந்திரா உறுதிப்படுத்தியுள்ளது.

டாடா ஹெரியர் - இ.வி.

ஜனவரி 2023ல்ஆட்டோ எக்ஸ்போவில் ஹெரியர் இவி-ஐ அறிமுகப்படுத்திய பிறகு, நிறுவனம் அதை உற்பத்தி செய்யும் வரிசையில் தயாராகி வருகிறது.

ஹாரியர் இ.வி. ஆனது இரண்டு பேட்டரி பேக் விருப்பங்களை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டத்தை உள்ளடக்கியிருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சிங்கிள் சார்ஜில் 500 கிமீ வரம்பைப் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

டாடா கர்வ் இ.வி.

2024ல் டாடா கர்வ் எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய டாடா திட்டமிட்டுள்ளதாக கடந்த சில வாரங்களுக்கு முன் செய்திகள் வெளிவந்தன. தில்லியில் நடைபெற்ற பாரத் மொபைலிட்டி க்ளோபல் எக்ஸ்போ 2024 கண்காட்சியில் கர்வ் இவி காட்சிப்படுத்தப்பட்டது.

இந்த மாடல் காரானது ஒரு முறை சார்ஜ் செய்தால் 400-500 கிமீ தூரம் வரை செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 30.2 kWh பேட்டரி பேக்கைக் கொண்டிருக்கும் டாடா நெக்ஸான் உடன் ஒப்பிடும்போது கர்வ் பெரிய பேட்டரி பேக்கைக் கொண்டிருக்கும் என்று தெரிவித்துள்ளனர். கூடுதலாக கர்வ் இரட்டை மோட்டார் அமைப்பைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஆல்-வீல் டிரைவ் திறன் வழங்ப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி 300 இ.வி.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி 300 பேஸ்லிப்ட் கார் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. இதன் முன்பக்கம் முழுவதும் ரீடிசைன் செய்யப்பட்டு புதிய ஹெட் லேம்ப், புதிய எல்இடி டிஆர்எல்எஸ் வசதி என பல விஷயங்கள் இதில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மஹிந்திரா நிறுவனம், தங்கள் ஃப்ளீட்டில் உள்ள மற்ற கார்களைப் போலல்லாமல், எலக்ட்ரிக் எக்ஸ்யூவி300ஐ உயர்தர வாகனமாக வழங்கத் திட்டமிட்டுள்ளது.  எக்ஸ்யூவி 300 இவி ஆனது காம்பாக்ட் எக்ஸ்யூவிக்கு 130 ஹெச்பியை உற்பத்தி செய்யும் மின்சார மோட்டாருடன் 40 kWh பேட்டரி பேக்குடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருமுறை சார்ஜ் செய்தால் இந்த கார் 300 கிமீ வரை பயணிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com