சஞ்சய் சிங்கின் மனு மீதான விசாரணை மார்ச் 5-க்கு ஒத்திவைப்பு!

ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சஞ்சய் சிங் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை மார்ச் 5-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. 
சஞ்சய் சிங்கின் மனு மீதான விசாரணை மார்ச் 5-க்கு ஒத்திவைப்பு
சஞ்சய் சிங்கின் மனு மீதான விசாரணை மார்ச் 5-க்கு ஒத்திவைப்பு

ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சஞ்சய் சிங் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை மார்ச் 5-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. 

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில், ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் சஞ்சய் சிங்கை அமலாக்கத் துறையினர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

சஞ்சய் சிங் ஜாமீன் கோரிய மனு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று  மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணை மார்ச் 5ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

கடந்த மாதத்துடன் சஞ்சய் சிங்கின் மாநிலங்களவை உறுப்பினருக்கான பதவிக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ஆத் ஆத்மி தரப்பில் மீண்டும் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

இதையடுத்து, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக இடைக்கால ஜாமீன் கோரி தில்லி நீதிமன்றத்தில் முறையிட்ட சஞ்சய்கின் மனு தள்ளுபடி செய்யபட்டடது. இருப்பினும் நீதிமன்றக் காவலிலேயே மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. 

இந்த நிலையில், சஞ்சய் சிங் மீதான குற்றச்சாட்டு உரிமைக் குழுவில் விசாரணைக்கு உள்ளதால் பதவியேற்புக்கு அனுமதிக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com