தொழில் தொடங்க ரூ.5 லட்சம் வரை வட்டியில்லாக் கடன்!

அனைத்துப் பிரிவு மக்களுக்கும் பலனளிக்கும் வகையிலான பட்ஜெட் வகுக்கப்பட்டுள்ளது: உத்தரப் பிரதேச அமைச்சர்
கோப்புப் படம்
கோப்புப் படம்

சொந்தமாக தொழில் தொடங்குவதற்காக ரூ.5 லட்சம் வரை வட்டியில்லாக் கடன் வழங்குவதாக உத்தரப் பிரதேச அரசு அறிவித்துள்ளது. 

உத்தரப் பிரதேச பட்ஜெட் கூட்டத்தொடரில் இதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அம்மாநில அமைச்சர் அபர்ணா யாதவ் தெரிவித்துள்ளார். 

உத்தரப் பிரதேசத்தில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், அனைத்துப் பிரிவு மக்களுக்கும் பலனளிக்கும் வகையிலான பட்ஜெட் வகுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பெண்கள் அதிகம் பலன் பெறுவார்கள். 

பட்ஜெட்டின் சிறப்பம்சமாக, சொந்தமாக தொழில் தொடங்க விருப்பமுள்ள அனைவருக்கும் ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது நீண்டகால பலன் அளிக்கும் அம்சமாக பார்க்கப்படுகிறது. இளைஞர்களை மேம்படுத்தும் பிரதமர் நரேந்திர மோடியின் செயலுக்கு இத்திட்டம் உறுதுணையாக இருக்கும் எனக் குறிப்பிட்டார். 

கல்வி கற்ற மற்றும் திறன் வாய்ந்த இளைஞர்கள் சுய வேலைவாய்ப்பை உருவாக்கவும் குறு நிறுவனங்களை வளர்ச்சியடைய செய்யவும் முதல்வர் யுவா யோஜனா திட்டத்தின்கீழ் ரூ.1000 கோடி உத்தரப் பிரதேச அரசு ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com